Site icon பாமரன் கருத்து

ஒரு தாய் நினைத்தால் அறிஞனை உருவாக்கலாம் | எடிசன் என்ற அறிஞன் உருவான கதை

எடிசன் என்ற அறிஞன் உருவான கதை

எடிசன் என்ற அறிஞன் உருவான கதை

இரும்பு மொத்தமாக பூமியில் இருந்துதான் வெட்டி எடுக்கப்படுகிறது. அதை யார் எதற்காக எப்படி பயன்படுத்துகிறார்களோ அதனைப்பொறுத்து தான் அதன் பயன்பாடு மாறுபடுகிறது. மனிதர்களும் அப்படித்தான்.
எடிசன் என்ற அறிஞன் உருவான கதை

 

ஒரு குழந்தை மூவரைத்தான் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நம்பத்துவங்குகிறது. அம்மா, அப்பா மற்றும் அதன் ஆசிரியர். இந்த மூவரில் எவரேனும் ஒருவர் அந்தக்குழந்தையின் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கு ஊக்கமளித்தால் நிச்சயம் ஒருநாள் அந்தக்குழந்தை மிகப்பெரிய ஆளுமையாக இந்த சமூகத்தில் உருவெடுத்து நிற்கும். குறிப்பாக, ஒரு குழந்தையை அதிகம் நேசிக்கின்ற அம்மா ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு அந்தப்பொறுப்பு என்பது அதிகம் இருக்கிறது. இந்தப்பகுதியில் நாம் பார்க்கப்போகும் “கண்டுபிடிப்புகளின் பேரரசன் – தாமஸ் ஆல்வா எடிசன்” அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவம் என்பது மிகச்சிறந்த உதாரணமாக இருக்கும்.

 

எடிசன் என்ற அறிஞன் உருவான கதை

 

சில உடல் குறைபாடுகளால் 8 வயதில் தான் பள்ளிக்கு அனுப்பப்பட்டார் எடிசன். எடிசன் பின்னாளில் ஆளுமையாக வருவதற்கு முழு முதற்காரணம் எடிசனின் அம்மா தான் என்றால் மிகை ஆகாது. அவரது அம்மா எப்போதும் சொல்வது ஒரே ஒரு விசயம் தான். “If you learn from your mistakes then you are intelligent. But if you learn from someone’s mistakes, then you are a Genius”. அதாவது, “ஒருவர் அவரது தவறுகளில் இருந்து திருத்திக்கொண்டால் அவர் புத்திசாலி. அடுத்தவரது தவறுகளில் இருந்து திருத்திக்கொள்பவர் மேதை”.

 

ஒருநாள் பள்ளிக்கு சென்றுவிட்டு எடிசன் வீடு திரும்பினார். அப்போது ஆசிரியர் கொடுத்ததாக ஒரு பேப்பரை தனது அம்மாவிடம் கொடுத்தார் எடிசன். அதனை பிரித்துப்பார்த்த எடிசனின் அம்மாவிற்கு கண்களில் நீர் வழிந்தது. அவர் தன்னை தேற்றிக்கொண்டு அந்த கடிதத்தை படித்தார் “Your son is a Genius. This school is not the right place for him, and there are no efficient teachers to train him. So, please train him yourself.” அதாவது உங்களது மகன் ஒரு மேதை. அவன் படிப்பதற்கு இது தகுந்த இடம் அல்ல, மேலும் அவனுக்கு சொல்லிக்கொடுக்க கூடிய அளவிற்கு இங்கே திறமை வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை” என்றார்.

 

அதன்பிறகு பள்ளிக்கு செல்வதை எடிசன் நிறுத்திக்கொண்டார். தனது தந்தையின் மூலமாக கிடைத்த புத்தகங்களை வீட்டிலேயே படித்து தனது அறிவை பெருக்கிக்கொண்டார். தனது அம்மா இறந்த பிறகு ஒருமுறை அலமாரியை பார்க்கும் போது தனது இளமைப்பருவத்தில் ஆசிரியர் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் உண்மையில் எழுதி இருந்தது இதுதான் “School cannot allow your son to attend classes anymore, he is mentally impaired. He is rusticated.”. அதாவது, உங்களது குழந்தைக்கு மூளை வளர்ச்சி சரியாக இல்லை ஆகவே அவனை இனிமேல் வகுப்பில் அனுமதிக்க முடியாது” என எழுதி இருந்தது. இதைப்பார்த்து தான் அவரது அம்மா கண்ணீர் வடித்து மாற்றிக்கூறினார். ஒருவேளை இந்தக்கடிதத்தில் இருந்தபடியே அவரது அம்மா படித்திருந்தால் எடிசன் என்ற விஞ்ஞானி அப்போதே முடங்கிப்போயிருப்பார். ஒவ்வொரு குழந்தைக்கும் ஊக்கம் கொடுக்க இப்படியொரு அம்மா இருந்தால் நிச்சயமாக எந்தவொரு குழந்தையும் மேதை ஆகும்.

 

எடிசன் எப்படி சாதித்தார் என்பது பற்றி விரிவாக இங்கே கிளிக் செய்து படியுங்கள்

ஒரு தாய் நினைத்துவிட்டால்….

 

ஒருவேளை எடிசன் அவர்களின் அம்மா அன்றைய தினம் அந்தக்கடிதத்தை அப்படியே படித்திருந்தால் எடிசன் மனதுடைந்து போயிருப்பார். ஒருவேளை எடிசனின் அம்மா ஆமாம் நமது மகனுக்கு திறமை இல்லை என எடிசனை ஒதுக்கியிருந்தாலும் எடிசன் என்ற விஞ்ஞானி உருவாகி இருக்க மாட்டார். எடிசனின் தாயார் அப்போது அற்புதமாக செயல்பட்டார், தனது பிள்ளையை அவர் முழுமையாக நம்பினார். அந்த நம்பிக்கையும் ஊக்கமும் தான் பின்னாளில் எடிசன் எனும் கண்டுபிடிப்புகளின் பேரரசன் உருவாவதற்கு முழு முதற்காரணம். உங்களது பிள்ளைகளை அலட்சியம் செய்யாதீர்கள். தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். அவர்கள் நிச்சயம் பெருமை தேடித்தருவார்கள்.






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version