Site icon பாமரன் கருத்து

மோடி – ஜின்பிங் சந்திப்பு | GoBackModi அவசியம் தானா?

narendra modi and Xi jinping meet

narendra modi and Xi jinping meet

சரியான சூழலில் சரியான காரணத்திற்க்காக வைக்கப்படும் எதிர்ப்பே வரவேற்பிற்கு உரியது. மற்றவை எதிர்ப்பு அல்ல, துவேசம் அவ்வளவே.தொடர்ச்சியாக துவேசம் செய்திடும் போது இழப்பு அதனை செய்பவர்களுக்கே ஏற்படுகிறது.
narendra modi and Xi jinping meet

மோடி அவர்கள் ஒவ்வொருமுறை தமிழகம் வரும்போதும் #GoBackModi என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்படுகிறது. எதிர்ப்பு என்ற நிலையைக்கடந்து துவேசம் என்ற நிலைக்கு #GoBackModi பிரச்சாரம் சென்றுகொண்டு இருக்கிறதா என எண்ணத்தோன்றுகிறது. சரியான நேரத்தில் சரியான பிரச்சனைக்கு எதிர்ப்பினை பதிவு செய்யாமல் எதற்கெடுத்தாலும் ஒரே கூக்குரலாய் சொன்னதையே சொல்லிக்கொண்டு இருப்பது சரியா? பிற்காலத்தில் நாம் உண்மையாக நமது எதிர்ப்பினை பதிவு செய்தாலும் கூட “தமிழகத்தில் இப்படித்தான் வரும்” என பிறர் அலட்சியமாக சென்றுவிட வாய்ப்பளித்துவிடாதா என்ற கேள்விகள் எழுகின்றன.

விமர்சிப்பதும் எதிர்ப்பதும் ஜனநாயக உரிமை

இந்தியக்குடிமகன் ஒவ்வொருவருக்கும் இந்திய நாட்டின் பிரதமரை தனிநபர் தாக்குதலாக அல்லாமல் விமர்சிக்க உரிமை உண்டு. அது நமக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் அளித்திருக்கக்கூடிய ஜனநாயக உரிமை. அதன்படி பார்த்தால் #GoBackModi என்று சொல்லவோ #TNWelcomesModi என சொல்லவோ உரிமை இருக்கிறது. ஆனால் நாம் சொல்வதில் ஒரு அர்த்தம், உண்மைத்தன்மை இருந்தால் தான்  அதனால் பயன் இருக்கும் என்பதே இங்கு நாம் கூற வருவது.

எதிர்ப்பை அர்த்தமுள்ளதாக்குங்கள்

மோடி அவர்கள் தற்போது இந்தியப்பிரதமர் ஆக இருப்பவர். அந்த பதவிக்கு என ஒரு மதிப்பு இருக்கிறது. அந்த பதவிக்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தே தீர வேண்டும். பிரதமர் ஒருவர் நமது மாநிலத்தில் இருக்கும் கல்லூரிக்கு பட்டமளிக்க வருகிறார் எனில் அதில் எதிர்ப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இப்போதும் பாருங்கள், இந்தியாவில் எத்தனையோ தொன்மையான பகுதிகள் இருக்கும்போது சீன அதிபர் ஜின்பிங் – மோடி அவர்கள் இருவரும் சந்திக்க நமது மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இதனால் நமக்கு எவ்வளவு பெரிய பெருமை. ஆனால் இப்போதும் நாம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம்? #GoBackModi என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துகொண்டு இருக்கிறோம்.

 

உண்மையில் தமிழகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்தால் நமது மாமல்லபுரம் தேர்தெடுக்கப்பட்டதற்கு மோடியை வரவேற்று இருக்க வேண்டும், நமது கலாச்சாரத்தை பின்பற்றி ஆடை அணிந்ததற்காக மோடியை வரவேற்று இருக்கவேண்டும். ஆனால் அதில் எதையுமே செய்யாமல் #GoBackModi என சொல்வது எப்படி அர்த்தமுள்ள எதிர்ப்பாகும்.

 

அரசியல்கட்சிகள் மொத்தமாக சமூக வலைதளங்களை குத்தகைக்கு எடுத்துவிட்டதன் விளைவாகவே சில விசயங்கள் மிகப்பெரிய அளவில் தொடர்ச்சியாக ட்ரெண்ட் செய்யப்படுகின்றன. ஆனால் அவை ஒட்டுமொத்த மாநில மக்களின் கருத்தாக பொதுவெளியில் பார்க்கப்படுவதுதான் இங்கே ஆபத்தாக பார்க்கப்படுகிறது.

மோடி அவர்களை எதிர்க்கக்கூடாது என நான் சொல்ல வரவில்லை. நமது மாநிலத்திற்கு ஒத்துப்போகாத திட்டத்தை அறிவிக்க வருகிறாரா அல்லது அப்படி எதையேனும் செய்துவிட்டு தமிழகம் வருகிறாரா நிச்சயமாக எதிர்க்கலாம். அத்தகைய சூழலில் நாம் செய்தால் தான் மோடிக்கும் நமது எதிர்ப்பு புரியும். நாம் இதனை செய்ததால் தான் நம்மை எதிர்க்கிறார்கள் என தெரிந்தால் தானே அவரால் நமது எதிர்ப்பை புரிந்துகொள்ள இயலும்.

 

அரசியல் கட்சிகள் தங்களின் சுயநலத்திற்காக, சுய விளம்பரத்திற்க்காக இப்படித்தான் செயல்படுவார்கள். சாதாரண பொதுமக்களாகிய நாம் தான் சிந்தித்து பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்

Join with me :

எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/BpBkoxYbAdXLPCC0kZ4Apg





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version