Site icon பாமரன் கருத்து

18 MLA Disqualification Case | What will happen?

 


 

18 MLA தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும்? தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு தமிழக அரசியலில் என்ன அதிரடி மாற்றங்கள் நடக்க வாய்ப்பிருக்கின்றது

 


 

18 MLA Disqualification Case Status

 

Disqualified MLA with their party head TTV Dinakaran

 

ஏற்கனவே விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் 18 MLA தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியென அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் , தவறு செல்லாதென நீதிபதி சுந்தரும் தீர்ப்பளித்தனர் . இதனால் இறுதி தீர்ப்பை வழங்கும் பொறுப்பு மூன்றாவது நீதிபதிக்கு (சத்தியநாராயணன் ) ஒதுக்கப்பட்டது . தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை ) வழங்கப்பட இருக்கின்றது .

 


இரண்டு விதங்களில் மட்டுமே தீர்ப்பு இருக்க முடியும் . செல்லும் , செல்லாது அவ்வளவுதான் .

 

18 MLA தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்தால் அவர்கள் மேல்முறையீட்டுக்கு செல்வார்கள் . ஆட்சி இப்போது போன்றே சலனத்தோடு நடக்கும் . ஊழல் குற்றசாட்டுக்கள் , ஆடியோக்கள் வேண்டுமானால் வெளிவரலாம் .

 

 

18 MLA தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்தால் என்னுடைய கணிப்பு சரியாக இருக்கும்பட்சத்தில் “ஆட்சிக்கு ஆபத்து நேராது“. ஆனால் ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட பல மாற்றங்கள் நடக்கலாம் . அதிமுக வோடு தினகரன் அவர்களின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைவதற்கு வாய்ப்பு அதிகமிருக்கின்றது . ஆட்சியை இழந்துவிட்டு வரப்போகும் MP தேர்தலையும் அதன் பிறகு வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்வதென்பது கடினம் என்பதனை இருவருமே உணர்ந்திருப்பார்கள் .

கடுமையான குற்றசாட்டுகளை சுமந்துவருகின்றவர்கள் ஆட்சியை இழந்துவிட்டு அதனை எதிர்கொள்வதென்பது அவர்களுக்கு அவர்களே பள்ளம் வெட்டிக்கொள்வதை போன்றது . இவ்வளவு நாள் பேசிவிட்டோமே எப்படி கூட்டணி சேர்வது , சேர்ந்தால் மக்கள் என்ன நினைப்பார்கள் அதெல்லாம் பற்றி கவலைப்பட வாய்ப்பே இல்லை . அதற்கான உதாரணத்தை நாம் ஏற்கனவே கண்டிருக்கிறோம் .

 

அரசியலில் எதுவும் சாத்தியம் என்பதனை இன்று நீங்கள் காணுவதற்கு வாய்ப்பு அதிகமிருக்கிறது .

 


 

எங்களுடைய கணிப்பின்படி 18 MLA தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என அறிவிப்பதற்கு தான் வாய்ப்பு அதிகமிருக்கின்றது . நீதிபதி அவர்களின் தீர்ப்பை நம்மால் 100 % முன்கணிக்க இயலாது . பார்க்கலாம் என்ன அரசியல் விளையாட்டுகள் அரங்கேறப்போகின்றன என்பதனை.

 


 

உங்களுடைய கருத்து என்ன ?

 

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version