Site icon பாமரன் கருத்து

அனுபவமே பாடம் : என்ன நடந்தது ரஜினி வழக்கில்?

Rajini speech

Rajini speech

நீங்கள் வழக்கை திரும்பப்பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை. நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். ரஜினி ட்வீட்.

Rajini speech

#அனுபவமே_பாடம் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நீதிமன்றத்தின் எச்சரிக்கைக்கு பிறகு வழக்கினை ரஜினி தரப்பு வாபஸ் வாங்கியவுடன் ரஜினி அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டது தான் இந்த ஹேஸ்டேக் வைரல் ஆனதற்குக் காரணம். ரஜினி அவர்களது ராகவேந்திரா திருமண மண்டபம் சென்னையில் இருக்கிறது. இதற்கு சொத்து வரியாக ரூ 6.50 செலுத்தவேண்டும் என சென்னை மாநகராட்சி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து தான் ரஜினி தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கில், எங்களது ராகவேந்திரா திருமண மண்டபம் மார்ச் 24,2020 முதல் காலியாகவே இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இருந்து எங்களுக்கு வருமானம் எதுவும் கிடைக்கவில்லை. சென்னை மாநகராட்சி விதி 1919 படி, 30 நாட்களுக்கு காலியாக இருந்து வருமானம் வரவில்லை எனில் வரிவிலக்கு கோர முடியும் என இருக்கிறது என கூறப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ் குறித்து அவர்களிடமே மேல்முறையீடு செய்திடாமல் வெறும் 10 நாட்களுக்குள் வழக்கு தொடர்ந்ததை கடுமையாக கண்டனம் செய்தார். மேலும் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் இதுபோன்ற வழக்கை வாபஸ் பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் எச்சரித்தார். இதனைத் தொடர்ந்துதான் ரஜினி தரப்பு இவ்வழக்கை வாபஸ் பெற்று இருந்தது.

ராகவேந்திரா மண்டப சொத்து வரி…

நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.

தவறைத் தவிர்த்திருக்கலாம்.#அனுபவமே_பாடம்

— Rajinikanth (@rajinikanth) October 15, 2020

இதுகுறித்து தான் ரஜினி அவர்கள் ட்விட்டரில் பின்வருமாறு தெரிவித்து இருந்தார்.

ராகவேந்திரா மண்டப சொத்து வரி…

நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.

தவறைத் தவிர்த்திருக்கலாம்.

#அனுபவமே_பாடம்

பொதுமக்கள் கருத்து : அனைவருமே கொரோனா பெரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் எவருக்குமே வருமானம் கிடைக்கவில்லை என்பதே எதார்த்தமான சூழல். அப்படி இருக்கும் போது பெரும் பணம் படைத்த ரஜினி அவர்கள் சொத்து வரியை நீக்கக்கோரி விண்ணப்பம் செய்திருப்பது தேவையற்றது என தெரிவிக்கிறார்கள். இன்னும் சிலரோ, ரஜினி அவர்கள் பொதுவாழ்வில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருக்கிறார். அப்படிப்பட்டவர் தன்னுடைய சொத்துக்கு மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் சொத்துவரியை ரத்து செய்திட கோரி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.

Share with your friends !
Exit mobile version