Site icon பாமரன் கருத்து

மிஷன் சக்தி அரசியலாக்கப்படுகிறதா? Mission Sakthi Controversy

மிஷன் சக்தி

 

மிஷன் சக்தி என்பது பிற நாட்டினரின் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கின்ற திட்டம். இதற்க்கு முன்னர் அமெரிக்கா , ரஷ்யா , சீனா ஆகிய நாடுகளே வெற்றிகரமாக இந்த பரிசோதனையை செய்து முடித்து இருந்தன. தற்போது நான்காவது நாடாக இந்தியா இணைந்துள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சிக்கழகம் (Defence Research and Development Organisation) இந்த சோதனையை அப்துல்கலாம் தீவில் இருந்து நடத்தியது. வெற்றிகரமாக நடந்த இந்த சோதனையில் விண்வெளியில் இருந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக 3 நிமிடங்களிலேயே தாக்கி அழிக்கப்பட்டது. இதனை புதன்கிழமை அன்று பாரத பிரதமர் நாட்டிற்கு தெரிவித்தார்.

 

Read This : மிஷன் சக்தி என்றால் என்ன?

 

விண்வெளியில் சாதனை என அனைவரும் பெருமைபட்டுக்கொள்கின்ற தருணத்தில் சில கேள்விகளும் எழுந்திருக்கின்றன. தேர்தல் காலம் ஆதலால் கூட இந்த கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கக்கூடும் என நினைத்துக்கொள்ளலாம்.

கேள்வி 1 : மிஷன் சக்தி வெற்றி குறித்து பிரதமர் அறிவித்தது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலா?

கேள்வி 2 : மிஷன் சக்தி பாஜக ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டமா? இந்தியா எப்போதிலிருந்து விண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கி அளிக்கின்ற திறனை பெற்று இருக்கிறது?

கேள்வி 3 : மிஷன் சக்தி வெற்றியில் ஆளும் பாஜக அரசிற்கு பங்கில்லையா?

கேள்வி 4 : மிஷன் சக்தி வெற்றி யாருக்கு சொந்தம்?

 


கேள்வி 1 : மிஷன் சக்தி வெற்றி குறித்து பிரதமர் அறிவித்தது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலா?

மிஷன் சக்தி வெற்றி குறித்த செய்தியினை பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலா என்பதனை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது. அதுவரை நாமும் காத்திருப்போம்.


கேள்வி 2 : மிஷன் சக்தி பாஜக ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டமா அல்லது காங்கிரஸ் ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டமா? இந்தியா எப்போதிலிருந்து விண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கி அளிக்கின்ற திறனை பெற்று இருக்கிறது?

நமது அரசு ஒரு விசயத்தை செய்கிறபோது அதனை செய்தது “இந்திய அரசு” என்று தான் உலகம் பார்க்கும். நாமும் அப்படித்தான் பார்க்க வேண்டும் என எண்ணுகிறேன். யாருடைய ஆட்சியில் இந்த மிஷன் சக்தி துவங்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலாக இருவரின் கருத்துக்களை நாம் பார்க்கலாம்.

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் அளித்துள்ள பதிலில் “2007 இல் பயனற்ற ஒரு செயற்கைகோளினை சீனா தாக்கி அளித்தபோது நாமும் அது போன்ற தொழில்நுட்பத்தை தயாரிக்கின்ற வேலையில் ஈடுபட்டிருந்தோம். ஆனால் நாம் அப்போது சோதனை செய்து பார்க்கவில்லை, “அரசியல் முடிவு” அதற்க்கு சாதகமாக கிடைக்கவில்லை.

வி கே சரஸ்வத் முன்னாள் DRDO தலைவர், தற்போதைய நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் – நாம் இந்த தொழில்நுட்பத்தினை முன்னரே பெற்று இருந்தாலும் அப்போது ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அனுமதி அளிக்காததனால் சோதனை செய்ய முடியவில்லை. ஆனால் இப்போதைய அரசாங்கம் அதற்க்கான அனுமதியை கொடுத்திருக்கிறது.


கேள்வி 3 : மிஷன் சக்தி வெற்றியில் ஆளும் பாஜக அரசிற்கு பங்கில்லையா?

 

மேற்கூறிய இரண்டு பதில்களோடு ஒப்பிட்டு பார்த்தல், சோதனை செய்ய தைரியமாக முடிவெடுத்ததற்கான பெருமை இப்போதைய ஆளும் பாஜக அரசையே சேரும்.


கேள்வி 4 : மிஷன் சக்தி வெற்றி யாருக்கு சொந்தம்?

 

உண்மையில் இந்த வெற்றி யாருக்கு சொந்தம் என கேட்டால் “இதற்காக கடினமாக உழைத்த விஞ்ஞானிகளுக்கும் இந்திய மக்களுக்கும் தான் இந்த வெற்றி சொந்தம்” . எவ்வளவு பெரிய முதலீடு, எத்தனை பேரின் கடின உழைப்பு இந்த மிஷன் சக்தி திட்டத்திற்கு தேவைப்பட்டிருக்கிறது, ஆனால் அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் இந்த விசயத்தை அரசியலுக்கு பயன்படுத்துகிறோம், நகையாடுகிறோம், விமர்சிக்கிறோம்.

நமது விஞ்ஞானிகளின் கடும் பணிக்கு கிடைத்த வெற்றி, அதற்கான பெருமை அனைத்தும் அவர்களுக்கே போகவேண்டும், எந்த அரசியல் கட்சியும் அதில் பங்கு கேட்க கூடாது, பயன்படுத்திக்கொள்ள பார்க்கக்கூடாது.


பாமரன் கருத்து
Exit mobile version