பொன்னார் மற்றும் போலிஸ் அதிகாரி யாத்திஸ் சந்திரா விற்கு இடையே நடந்த வாக்குவாதம் pic.twitter.com/It85vLiMX0
— பாமரன் கருத்து (@pamarankaruthu) November 22, 2018
மத்திய இணை அமைச்சராக இருக்கக்கூடிய பொன் ராதாகிரிஷ்ணன் அவர்கள் சபரிமலைக்கு சென்று இருந்தபோது, பம்பைக்கு வாகனங்களை அனுமதிக்க மறுத்த காவல்துறை உயர் அதிகாரியுடன் வாக்குவாதம் நடைபெற்றது .
இதில் அமைச்சரென்றும் பாராமல் அதிகாரி அப்படி பேசியிருக்க கூடாதென்றும் அவர் மீது நடவெடிக்கை எடுக்கவேண்டும் எனவும் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன .
உண்மையில் அங்கு விவாதம் ஏன் நடந்தது ? என்ன விவாதம் நடந்தது ?
சபரிமலையில் கட்டுப்பாடுகள்
தற்போது சபரிமலையில் கேரள அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது . அதில் ஒன்றுதான் பம்பைக்கு அரசு பேருந்துகளில் மட்டும்தான் செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு (இதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம் )
தமிழகத்தை சேர்ந்த பொன் ராதாகிரிஷ்ணன் அவர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து அய்யப்பனை தரிசிக்க செல்கின்றார் . புதன்கிழமை காலை அரசு வாகனத்தில் நிலக்கல் செல்கின்றார் .அவரது அரசு வாகனத்தோடு தனியார் வாகனங்களும் செல்கின்றன . அங்கு தான் அவரது வாகனம் போலீஸ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்படுகிறது .
அங்கு இருக்கும் யாத்திஷ் சந்திரா என்னும் அதிகாரி ” அமைச்சரின் அரசு வாகனத்தை வேண்டுமானால் அனுமதிக்கலாம் , ஆனால் உடன் வருகின்ற தனியார் வாகனங்களை அனுமதிக்க முடியாது . அரசின் விதிப்படி கேரள அரசுப்பேருந்துகள் மட்டுமே செல்ல முடியும் ” என்றார் .
பொன்னார் அவர்கள் அதிகாரியிடம் ” ஏன் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை ” என கேட்டார் . அதற்கு அதிகாரி ” அண்மையில் பெய்த கனமழையால் பம்பையில் பெரும்பலான பார்க்கிங் இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன , சரிந்து விடுவதற்கான வாய்ப்புகள் உண்டு ” ஆகையால் தான் அனுமதிப்பதில்லை ” என்றார் .
பொன்னார் ” அரசு பேருந்துகள் செல்ல முடியும் எனும்போது தனியார் வாகனங்கள் ஏன் செல்லக்கூடாது ?” . அதற்கு காவல்துறை அதிகாரி ” அரசு பேருந்துகள் பயணிகளை இறக்கிவிட்டவுடன் திரும்பி வந்துவிடும் , அங்கு நிற்க தேவையில்லை . ஆனால் தனியார் வாகனங்களை அனுமதித்தால் அங்கே நிறுத்திவிட்டு செல்வார்கள் . அதனால்தான் அனுமதிப்பதில்லை “.
மேலும் “நாங்கள் தனியார் வாகனங்களை அனுமதித்தால் அங்கே நெரிசல் ஏற்ப்படும் . அதற்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா ? ” . அதற்கு பொன்னார் அப்படியொரு கேரண்டியை கொடுக்க முடியாது என சொல்ல , அதற்கு அதிகாரி “எவரும் பொறுப்பேற்றுக்கொள்வதில்லை அதுதான் பிரச்சனை ” என்றார் .
பின்னர் பொன்னார் ” நான் பக்தனாக இங்கு வந்துள்ளேன் உங்களது கட்டுப்பாடுகளால் வேதனை அடைகிறேன் ” என தெரிவித்தார் . பின்னர் அரசு உத்தரவுப்படி அரசுப்பேருந்தில் பயணம் செய்து சுவாமி தரிசனம் செய்தார் .
இதுதான் அங்கு நடந்தது ….
அமைச்சரென்றும் பாராமல் அரசு விதிமுறைப்படிதான் நடக்க வேண்டும் என வலியுறுத்திய அதிகாரி மீது தவறா ? நடவடிக்கை எடுக்க வேண்டுமா ? என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் .