Site icon பாமரன் கருத்து

“அசத்துறாரே செங்கோட்டையன் ” – மணியனும் மங்குனியும்

மணியன் : என்னடா மங்குனி அமைச்சர் செங்கோட்டையன் போட்டோவை இப்புடி பாத்துட்டு இருக்க …என்ன எழுதிருக்காங்க

மங்குணி : ஆமாய்யா ! பள்ளிக்கல்வித்துறைல நல்ல மாற்றம் கொண்டுக்கிட்டு வர்றாராம்ல …அத பத்திதான் படிக்கிறேன் …

மணியன் : ஆமாடா நல்ல விவரம் தெரிஞ்சவங்க கூட அப்டித்தான் பேசிக்கிறாங்க …பழனிசாமி அமைச்சரவைல உருப்படியா வேலை பாக்குற அமைச்சர் செங்கோட்டையன் தானாம்  .

மங்குணி : அப்படியா ! அப்படி என்ன பண்ணிட்டாரு ?

மணியன் : நீதிமன்றம் உத்தரவிட்டும் ஜெயலலிதா இருந்தப்போ ஈகோ காரணமா “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஒழுங்கா பராமரிக்கல , எந்த நடவடிக்கையும் எடுக்கமா இருந்தாங்க ” ..ஆனா செங்கோட்டையன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் ஆனதும் பராமரிப்பு வேலைகளுக்கும் புதிய புத்தகங்கள் வாங்குவதற்கும் பச்சைக்கொடி காட்டினார் . குறிப்பாக சிறந்த திறமைசாலி நல்லவர் என பெயர் பெற்ற உதயசந்திரன் IAS அவர்களின் நல்ல திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார் .

மங்குணி : ஆமாங்கய்யா நானும் கேள்விப்பட்டேன் , சனிக்கிழமை தோறும் “பொன்மாலைப்பொழுது”  நிகழ்ச்சி கூட நடக்குதாமே …சொல்லிக்கிட்டாங்க

மணியன் : ஆமா ஆமா அதுனாலதான் செங்கோட்டையனுக்கு நல்ல பேரு

அதுமட்டுமில்ல தமிழ்நாட்டு மக்களோட பெரிய அவலமா இருந்தது ரொம்ப கல்வித்தரம் குறைந்த பாடத்திட்டம்தான் . அத மாத்தி ரொம்ப சிறப்பா கொண்டுவந்துக்கிட்டு இருக்காங்களாம் …எதிர்தரப்பு சொல்லுற கருத்துக்களையும் ஏத்துக்குறாங்களாம்.

மங்குணி : நீட் பரீட்சைக்கு சொல்லிகுடுக்குற சென்டர் கூட சிறப்பா செஞ்சுருக்காங்களாமே

மணியன் :ஆமா …உச்சநீதிமன்றம் சொன்னதுக்கு அப்பறம் நீட் தேர்வை ரத்து செய்யிறது ரொம்ப கடினம்னு தெரிஞ்சுதான் ….நீட் பயிற்சி நிலையங்களை தொறந்திருக்கங்களாம் .

எப்படியோ நம்மளோட கல்வித்தரம் உயர்ந்தால் சரிதான் . அமைச்சருக்கு துறை சார்ந்த அறிவு இருக்கவேண்டும் என்பதில்லை அறிவார்ந்த அதிகாரிகளை தேர்ந்தெடுத்து அவர்களை பயன்படுத்திக்கொண்டாலே நல்லாட்சி செய்திட முடியும் . உதாரணம் பள்ளிக்கல்வித்துறையும் செங்கோட்டையன் அவர்களும்தான் .

குற்றம் நடக்கும் போது கேள்வி கேட்கும் நமக்கு நல்லது நடந்தால் பாராட்டும் பொறுப்பும் இருக்கின்றது .

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version