எழுத்துக்கள் காதலித்தால்
வண்ண வார்த்தைகளாகும்
வார்த்தைகள் காதலித்தால்
வருடும் வாக்கியங்களாகும்
வாக்கியங்கள் காதலித்தால்
கனிந்த கவிதைகளாகும்
கவிதைகள் காதலித்தால்
கற்கண்டு காவியமாகும்
சாதாரண எழுத்தே காதலித்தால் காவியமாகும் என்றால் மனிதனாக பிறந்த நாம் காதலித்தால் சந்தோச சரித்திரம் நிச்சயம் படைக்கலாமே .
வாழ்வின் சந்தோச தருணங்களை பட்டியலிட சொன்னால் காதலித்த அல்லது காதலிக்க விரும்பியவர்களுடனான நினைவுகளே பிரதான இடம் பிடிக்கும் .
எதற்க்காக அவரை காதலிக்கிறீர்கள் என கேட்டால் பல நேரங்களில் காதலர்களின் பதில் வெற்றிடமாகவே இருக்கும் . ஆமாம் உண்மையான காதலுக்கு காரணம் இருக்காது என்பதே உண்மையின் சாராம்சம் .
சிறந்த காதலால் தான் சமூக ஏற்றத்தாழ்வுகளை , சாதிய பாகுபாடுகளை ஒழித்து நல்ல சமூகம் ஒன்றினை படைக்க முடியும் .
காதலென்பது திருமணத்திற்கு முன்பாக செய்வது என்பது மட்டுமில்லை . திருமணத்திற்கு பின்பு நம் கரம்கோர்த்து வாழ்வெனும் வசந்த புல்வெளியில் சந்தோசத்தை பெருக்கிட வந்த மனைவியையும் , பெண்கள் கணவரையும் காதலிக்கலாம் .வேலைக்காக ஓடி ஓடி புரிதலும் போதிய நேரமும் இல்லாமல் புரிந்துணர்வு குறைந்து முறிந்துபோன உறவுகளின் எண்ணிக்கை கூடுவது வருத்தமே .
உண்மையாக நேசியுங்கள் …
உயிராக காதலியுங்கள் …
உயிர்ப்போடு வாழ்ந்திடுங்கள் …
அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் .
நன்றி
பாமரன் கருத்து