Site icon பாமரன் கருத்து

தீர்ப்பு விவரம் : கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய சென்னை நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களை விவசாயிகளிடம் இருக்க கூடிய நிலத்தின் அடிப்படையில் அவர்களை பிரித்து அதில் குறைந்த நிலம் வைத்திருப்போருக்கு மட்டும் தள்ளுபடி செய்திருந்தது தமிழக அரசு.
இதனை எதிர்த்து அய்யாக்கண்ணு என்பவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அனைவருக்கும் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.


தமிழக அரசின் எதிர்ப்பும் நீதிமன்றத்தின் விளக்கமும் : 

இந்த வழக்கில் அரசு சார்பாக வைக்கப்பட்ட விவாதத்தில் , அரசின் கொள்கை  முடிவுகளில் நீதிமன்றம் தலையிட கூடாது என கேட்டுக்கொண்டது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டம் 14 ஆம் பிரிவின்படி சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் (right to equality before law) என்றும், மக்களை வகைப்படுத்துதல் தவறில்லை ஆனால் வர்க்க முறையில் நிலம் அதிகம் வைத்திருப்போருக்கு ஒரு நியதி குறைவாக வைத்திருப்போருக்கு ஒரு நியதி என வகைப்படுத்துதல் கூடாது என தெளிவு படுத்தியுள்ளது. நீங்கள் இப்படி வைப்படுத்தியிருப்பதால் நாங்கள் தலையிடலாம் என்றும் கூறியுள்ளது .

தமிழக அரசின் அடுத்த எதிர்ப்பில் , தமிழக அரசு ஏற்கனவே நிதி தட்டுப்பாட்டில் இருந்து வருகிறது என்றது.

அதற்க்கு நீதிபதிகள் அளித்த விவரத்தில், ஆம் தமிழக அரசு நிதி தட்டுப்பாட்டில் தத்தளிக்கிறது என்பதனை நாங்களும் ஏற்கிறோம். அதேநேரத்தில் தற்போதைய தங்களின் உத்தரவால் அரசுக்கு ஆகப்போகிற செலவு என்பது ₹1,980 கோடி ரூபாய் ..அரசு ஏற்கனவே தள்ளுபடி செய்த தொகையான ₹5,780 கோடி .

ஆனால் இந்த உத்தரவின் மூலமாக கூடுதலாக 3,01,926 விவசாயிகள் பயனடைவார்கள். ஏற்கனவே பயனடைந்தவர்கள்  எண்ணிக்கை 16,94,145 விவசாயிகள்.

மேலும் தனது உத்தரவில் இதுபோன்ற இக்கட்டான சமயங்களில் மத்திய அரசு மாநில அரசுக்கு உதவிட வேண்டும். மாநில அரசுடன் நிதி பற்றாக்குறையை மத்திய அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் தனது விளக்கத்தில் அரசு வழக்கறிஞர் கூறிய “விவசாயிகளை நிலம் அடிப்படையில் பிரிக்க முறையான திட்டம் எதுவும் இல்லை”  என்கிற விளக்கத்தின் அடிப்படையில் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்காமல் போக கூடாது என்பதை கருத்தில் கொண்டு அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டனர்

முக்கிய குறிப்புகள் : 

அரசியலமைப்புக்கு முன் அனைவரும் சமம் 

விவசாயிகளை (மக்களை ) வர்க்க அடிப்படையில் பிரிக்க கூடாது.

மாநில அரசின் நிதி பற்றாக்குறையில் மத்திய அரசு உதவிட வேண்டும்.

அனைவருக்கும் கடன் தள்ளுபடி.

நன்றி
பாமரன்

Share with your friends !
Exit mobile version