Site icon பாமரன் கருத்து

இந்தியாவில் கழிப்பறையின் வாழ்நாள்

முதல்வாரம் பயணம்

போனேன்

அடிக்கல் நாட்டியிருந்தது
கழிப்பறைக்கு

நிம்மதியடைந்தேன்!

மூன்றாம்வாரம் பயணம்
போனேன்
பளபளப்பாக கட்டியிருந்தது
கழிப்பறை

மகிழ்வடைந்தேன்!

ஐந்தாம்வாரம் பயணம்
போனேன்
துர்நாற்றமோடு உடைந்திருந்தது
கழிப்பறை

வெறுப்படைந்தேன்!

ஏழாம் வாரம் பயணம்
போனேன்
பராமரிப்பில்லாமல் மூடியிருந்தது
கழிப்பறை

ஆச்சர்யமடைந்தேன்!

தொடங்கி ஏழு வாரம் தான்
தூய்மை இந்தியாவில் கழிப்பறையின் வாழ்நாள் .

நன்றி
பாமரன் கருத்து

Exit mobile version