Site icon பாமரன் கருத்து

How Search Engines works? | Tamil | தேடுபொறி எவ்வாறு வேலை செய்கிறது?

What is Search Engine?

Search Engine என்பதனை தமிழில் இணையதள “தேடுபொறி” என கூறலாம். நமக்கு தேவையான விவரங்களை இதில் தேடிடும் போது அல்லது கேள்விகளை கேட்டிடும் போது அதற்கான பதிலையோ அல்லது இணையத்தில் இருக்கக்கூடிய அது சம்பந்தப்பட்ட விவரங்களை நமக்காக கொண்டு வந்து கொடுப்பது Search Engine இதன் வேலை.

Search Engines are actually a answer machine

How Search Engine Works? | Search Engine எவ்வாறு வேலை செய்யும்?

ஒரு தகவலை நாம் தேடுகிறோம் என வைத்துக்கொள்வோம். உதாரணத்திற்கு “இந்தியாவின் பிரதமர் யார்?” என தேடுகிறோம். ஏற்கனவே பல இணையதளங்களில் இந்தியாவின் பிரதமர் மோடி என இருக்கும். ஆனால் பல ஆயிரக்கணக்கான இணையதளங்களில் இதே பதில் இருக்கும். ஆனாலும் கூகுள் தனது முதல் பக்கத்தில் சில குறிப்பிட்ட இணைய பக்கங்களை மட்டுமே காட்டுகின்றன.

அப்படி இடம்பெறுகின்ற இணையதளங்களை அதிக மக்கள் பார்ப்பார்கள். அந்த இடத்தில் ஒரு இணையதளத்தை தருவதற்கு கூகுள் பல வழிமுறைகளை நொடிக்கும் குறைவான வேகத்தில் செய்து முடிக்கும். அந்த தகவல் எப்போது அப்டேட் செய்யப்பட்ட தகவல், இதற்கு முன்னர் அதனை எத்தனை நபர்கள் பார்த்திருக்கிறார்கள், அந்த இணையதள பக்கம் எவ்வாறு அமைக்கப்பட்டு இருக்கிறது, backlinks எத்தனை இருக்கிறது, என்ன மொழியில் இருக்கிறது என இன்னும் பல condition களை வைத்துக்கொண்டு அதில் முன்னனி பெறுகின்ற இணையதளத்தை நமக்கு காட்டும்.

அந்த இடத்தை நமது இணையதளம் பிடிக்க நாம் செய்வது தான் SEO (Search Engine Optimization)

Functions of search engine?

தேடுபொறி இரண்டு முக்கிய வேலைகளை செய்து நமக்கான பதில்களை, விவரங்களை தருகிறது.

> Crawling
> Indexing

What is Crawling and indexing?

Crawler என்பது புரோக்ராம் (Program). இந்த புரோக்ராம் (Program) ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இணையத்தில் இருக்கக்கூடிய அனைத்து இணையதள பக்கங்கள், அதில் இருக்கக்கூடிய தகவல்கள், link, images,videos என அனைத்தையுமே படித்து சில தரவுகளை எடுத்து வைத்துக்கொள்ளும்.

உதாரணத்திற்கு நாம் ஒரு புத்தகத்தை படிக்கிறோம் என்றால் குறிப்பு எடுத்து வைத்துக்கொள்கிறோம், பிறகு தேவைப்படும்போது அந்த பக்கத்தை திறந்து பார்க்கிறோம் அல்லவா? அது போன்றுதான் Crawler இயங்கும். அப்படி எடுத்துவைக்கும் தகவல்களை முறைபடுத்தி வைப்பதற்கு பெயர் தான் “indexing”

Search Engine களின் Crawler ‘bot’ என்றும் ‘spider’ என்றும் அழைக்கப்படும்.

இணையதளத்தை எவ்வாறு ஆரம்பிப்பது? என்பது பலருக்கு எளிமையாக தெரிந்துகொள்ளக்கூடிய விசயமாக இருக்கும். ஆனால் இணையத்தில் சம்பாதிப்பதற்கும் முன்னனி இணையத்தளமாக உங்களுடைய இணையதளத்தை கொண்டுவருவதற்கு SEO மிகவும் அவசியமான ஒன்று.

 

List of Top 5 Most Popular Search Engines In the World

Google

Bing

Yahoo

Ask.com

AOL.com

தற்போது இணைய உலகில் முன்னனி தேடுபொறிகள் பல இருக்கின்றன, அவை அனைத்துமே வெவ்வேறான முறையில் செயல்படுகின்றன.

Google முன்னனி search engine

Pamaran Karuthu

************************************************************

 

Share with your friends !
Exit mobile version