Site icon பாமரன் கருத்து

Microsoft Excel Introduction | மைக்ரோசாப்ட் எக்ஸல் அறிமுகம்

 Microsoft Excel Introduction VIDEO

மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய வெற்றிகரமான சாப்ட்வேர் களில் ஒன்று “மைக்ரோசாப்ட் எக்ஸல்”. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சாப்ட்வேர் களில் அதிகம்பேரால் பயன்படுத்தக்கூடிய பல பயன்பாடுகளை கொண்டது மைக்ரோசாப்ட் எக்ஸல். கணினி பயன்படுத்தும் சாதாரண மளிகை கடையில் இருந்து மிகப்பெரிய தொழில்நுட்ப கம்பெனிகள் வரையிலும் எக்ஸல் பயன்படுத்தப்படுகிறது.

எக்ஸல் உதவியுடன் இரண்டு எண்களை கூட்டுவது முதல் மிக கடினமான கணக்குகள் வரை செய்யமுடியும். அதோடு பிற கணினியில் இருக்க கூடிய பிற சாப்ட்வேர் களுடன் இணைந்து செயலாற்றக்கூடிய திறன் எக்ஸல் சாப்ட்வேர் க்கு உண்டு. 1987 இல் ஆரம்பித்து இதுவரை தொடர்ச்சியாக பல வெர்சன்களை (versions) கொண்டுவந்துள்ளது.

 

 

நாம் ஒவ்வொருவரும் கணினி கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்போது முதலில் ஆரம்பிப்பது  “paint” சாப்ட்வேர் இல் தான். அதுபோலவே எக்ஸல் சாப்ட்வேர் கற்பதற்கு மிக எளிமையாக இருக்கும். நீங்கள் கற்றுக்கொண்டால் நிச்சயமாக உங்களுக்கு அது பயன்படும்.

தமிழ் படிக்கும் மாணவர்கள் தமிழில் மைக்ரோசாப்ட் எக்ஸல் படிக்க இந்த பதிவுகள் உதவும். தொடர்ந்து படியுங்கள், உங்களது கேள்விகளை பதிவிடுங்கள். கற்று தேருங்கள் .

Share with your friends !
Exit mobile version