Site icon பாமரன் கருத்து

அரசியல் ஆளுமை அதிகாரம் – ஜெயலலிதா

தமிழக அரசியல் பல தலைவர்களை கண்டிருந்தாலும் ஆளுமை அதிகாரம் என்றவுடன் நினைவுக்கு வருபவராக இருப்பவர் அவர் ஒருவரே, ஆம் ஜெயலலிதா தான் அந்த தலைவர்.

 

ஜெயலலிதா


யார் இந்த ஜெயலலிதா ?

1973 இல் எம்ஜிஆர் அவர்கள் திமுகவில் இருந்து வெளியேற்ற்றப்படுகிறார். அதிமுக உதயமானது மேலும் 1977 இல் அதிமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. 1981ல் அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு 1984ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார். தன் கன்னி பேச்சுகளால் அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியே கவர்ந்தார். பொதுவாக வருகின்ற எதிர்ப்பு ஜெயலலிதா அவர்களுக்கும் இருந்தது. ஆனால் அத்தனையையும் கடந்து தன்னை அதிமுகவில் முன்னிறுத்திக்கொண்டார். அதனை எம்ஜிஆர் அவர்களும் அனுமதித்தார்.

எம்ஜிஆர் உடல்நலக்குறைவினால் அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்டபோது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார் ஜெயலலிதா. 1987 இல் எம்ஜிஆர் இறந்த போது ஜானகி அணி ஜெயலலிதா அணி என இரண்டு அணிகள் உருவாகின அதிமுகவில். இரண்டு அணிகளும் தனி தனியே தேர்தலை சந்தித்தன. அதில் ஜெயலலிதா அணி வெற்றிபெற்றது. பிறகு அதிமுக முழுவதுமாக ஜெயலலிதா கட்டுப்பாட்டில் வருகின்றது.


தமிழக முதல்வராக ஜெயலலிதா

ஜெயலலிதா தமிழக முதல்வராக கீழ்காணும் காலங்களில் பணியாற்றியிருக்கிறார்.


ஆளுமையின் அர்த்தமே ஜெயலலிதா

தமிழகம் எத்தனையோ தலைவர்களை கண்டிருந்தாலும் இவரை போல ஆளுமையுடன் இருந்தவர்கள் வேறு எவரும் இல்லை என்றே கூறலாம். ஒரு பெண்ணாக இருந்தாலும் தனது கடின உழைப்பினாலும் அறிவினாலும் அதிமுக என்கிற மிகப்பெரிய கட்சிக்கு ஆளுமை மிக்க தலைவராக தன்னை உயர்திக்கொண்டார். சரியோ தவறோ இவர் எடுப்பதே முடிவு. சாதாரண அதிமுக தொண்டனை சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சர் பதவியில் இருப்பவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே கூட நீக்கும் ஆளுமை இவருக்கு இருந்தது.

இவர் சொல்லி செய்தார்களோ அல்லது தானாகவே செய்தார்களோ அல்லது சிலர் செய்ததால் மற்றவர்களும் செய்தார்களோ என தெரியவில்லை, இவர் கால்களில் விழாத அதிமுக பிரமுகர்கள் எவரும் இல்லை. அவர் உயிரோடிருக்கும் வரையில் அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் கூட பேட்டியளிப்பதை காண முடியாது. அவ்வளவு கட்டுக்கோப்பாக கட்சியை வழிநடத்தினார் என்றால் மிகையாகாது.

 


செயற்கரிய திட்டங்கள்

இன்று அரசியலில் அடியெடுத்து வைத்தவர்கள் தமிழகம் வளர்ச்சியுறாமல் போனதற்கு திராவிட கட்சிகளே காரணம் என கூறுகிறார்கள். ஊழல் இருந்தது இருக்கிறது என்பது உண்மைதான் ஆனால் தமிழகம் திராவிட ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது என்பதும் உண்மைதான். ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் பல திட்டங்களை ஏழை எளிய மக்களுக்காகவும் குறிப்பாக பெண்களுக்காகவும் கொண்டு வந்தார்.

உதாரணமாக, தாய்மார்கள் பயணம் செய்திடும்போது பேருந்து நிலையங்களில் குழந்தைகளுக்கு மறைவாக தாய்ப்பால் கொடுப்பது சிரமமாக உள்ளது என்பதை உணர்ந்து தனி அறைகள் ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் உருவாக்கப்பட்டன. உலகில் எவருமே சிந்திக்காத பிரச்சனை இது. முதன்முதலாக தமிழகத்தில்தான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

அடுத்ததாக அம்மா உணவகம், அம்மா குடிநீர் என பல அதிரடி திட்டங்களின் மூலமாக ஏழைகளின் வயிற்றுப்பசியை போக்கினார். இந்தியாவின் பிற மாநிலங்கள் இந்த திட்டங்களை தங்கள் மாநிலங்களிலும் கொண்டு வந்தது.


 

மோடியா லேடியா

2014 மக்களவை தேர்தல்,இந்தியா முழுமைக்கும் மோடி அலை வீசுவதாகவும் அனைத்து இடங்களிலும் அவரே வெற்றி பெறுவார் எனவும் பரவலாக பேசப்பட்டது. நரேந்திர மோடியுடன் ஜெயலலிதா அவர்கள் நட்பு கொண்டிருந்தாலும் “இங்கு மோடி இல்லை இந்த லேடி தான் ” என பகிரங்கமாக தேர்தல் பிரச்சாரம் செய்து மிகப்பெரிய வெற்றியும் பெற்றார். யாரையும் எதிர்க்கும் துணிவு கொண்டிருந்தார் ஜெயலலிதா என்றால் மிகையாகாது.


 

சாதனை சிகரமாக ஜெயலலிதா

இரட்டை இலை

2016 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தைரியமான முடிவை எடுக்கும் துணிவு இவரை தவிர எவருக்கும் இருந்ததில்லை. அந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றார் ஜெயலலிதா. எம்ஜிஆர் அவர்களுக்கு பிறகு தொடர்ச்சியாக இருமுறை வெற்றியை தமிழக அளித்த வரலாறு ஜெயலலிதாவிற்கே உண்டு.

 


வழக்குகள்

ஜெயலலிதா எப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரோ அதனைப்போலவே பல வழக்குகளுக்கும் அவர் சொந்தக்காரராக இருந்தார்.

வண்ணத் தொலைக்காட்சி வழக்கு
டான்சி நில வழக்கு
பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு
நிலக்கரி இறக்குமதி வழக்கு
டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்கு
பிறந்த நாள் பரிசு வழக்கு
சொத்துக் குவிப்பு வழக்கு

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, வி. என். சுதாகரன், ஜெ. இளவரசி ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இதில் நான்கு பேரில் செயலலிதா மட்டும் இறந்ததை அடுத்து வி. கே. சசிகலா, வி. என். சுதாகரன் மற்றும் ஜெ. இளவரசி ஆகிய மூன்று பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


ஜெயலலிதா இல்லாத தமிழகம்

ஜெயலலிதா இருந்தவரையில் மாநில அரசின் உரிமைகளுக்கு எதிராக இருந்தாக கருதிய எந்த திட்டத்திற்கும் அவர் அனுமதி அளிக்கவே இல்லை. [நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு, உதய் மின் திட்டம், ஜி.எஸ்.டியில் மாநில பங்கு குறித்த நிலைப்பாடு, துறைமுகம் – மதுரவாயல் திட்டம், கடலோர மேம்பால நெடுஞ்சாலை திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் ]

ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்தபோதும் அவர் மறைந்துவிட்டபிறகும் அந்த திட்டங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள் ஜெயலலிதா ஆட்சியை நடத்துகிறோம் என கூறிக்கொண்டவர்கள்.

அதிமுக ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது மிகப்பெரிய கட்டுக்கோப்புடன் இருந்துவந்தது ஆனால் அவர் மறைந்தவுடன் அதிமுக நிலைகுலைந்துபோனது. தற்சமயம் யார்யாரோ என்ன என்னவோ பேசுகிறார்கள். கண்ட திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கிறார்கள்.

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளியென கூறப்பட்டாலும் அது அவரது ஆதரவாளர்களின் விகிதத்தை எந்த அளவிலும் குறைக்கவில்லை.கட்சி பாகுபாடு இல்லாமல் அவர் மறைந்தபோது ஒட்டுமொத்த தமிழகமும் கலங்கியது .

இன்றும் என்றும் அவர் தமிழக மக்களின் மனதில் நிலைத்திருப்பார் என்பதே உண்மை.


பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version