Site icon பாமரன் கருத்து

Labour Day History | May 01 | மே தின வரலாறு

 

உழைக்கும் வர்க்கத்திற்கு மே தினம் (உழைப்பாளர்கள் தினம் ) வாழ்த்துக்கள் .

பூமியை உருவாக்கியவன்
கடவுளாக இருக்கலாம்

வாழத்தகுந்ததாக மாற்றியவன்
உழைப்பாளி மட்டுமே

குண்டும் குழியுமாக , ஒன்றிற்கும் உதவாமல் கிடந்த பூமியை செதுக்கி மனிதர்கள் இன்பமாக வாழ ஏற்ற இடமாக மாற்றியதில் உழைப்பாளர்களின் பங்கு இன்றியமையாதது . அப்படிப்பட்ட உழைப்பாளர்களை நினைவூட்டி நன்றி சொல்லிட தகுந்த நாள் உழைப்பாளர்கள் தினம் (மே 01 ) .

மே தினம் உருவான வரலாறு (MayDay History):

அப்போதெல்லாம் அதிகமாக மனித உழைப்பையே வேண்டியிருந்த காலம் . குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரைக்கும் கூட தொழிலாளர்கள் உழைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர் .

இப்படி முதலாளித்துவத்தின் பிடியில் சிக்கிகொண்டிருந்த தொழிலாளர்களை மீட்டெடுத்து நாளொன்றுக்கு வேலை செய்யும் நேரத்தை குறைத்திடும் கோரிக்கையோடு பல அமைப்புகள் களமிறங்கியிருந்தன . அவற்றில் பல அமைப்புகள் அதிகார வர்க்கத்தினரால் அடக்கி ஒழிக்கவும் செய்யப்பட்டன .

குறிப்பிடத்தக்க வகையில் இங்கிலாந்தில் சாசன இயக்கம் என்கிற அமைப்பு 10 மணிநேர வேலை என்பது உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளோடு களமிறங்கியது .

1830 களில் பிரான்ஸ் நாட்டு நெசவு தொழிலாளர்கள் 15 மணி நேர உழைப்பிற்கு காட்டாயப்படுத்தப்பட்டு வேலை வாங்கப்பட்டனர் . இதனை எதிர்த்து 1834 இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோரிக்கையோடு கிளர்ந்தெழுந்தனர் . வழக்கம்போல அடக்கி ஒடுக்கப்பட்டது அந்த எழுச்சி .

தற்போது நாம் வேலை பார்க்கும் 8 மணிநேர வேலை கோரிக்கை ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகர கட்டிட தொழிலார்களால் முன்வைக்கப்பட்டது . மிகபெரிய போராட்டமாகவும் வலுப்பெற்று வெற்றிடைந்தது .

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் உருவாக்கப் பட்டது. இந்த இயக்கம் 1886, மே 1 ஆம் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் தோன்றக் காரணமாக இருந்தது எனலாம்.

1889 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் சோசலிசத் தொழிலா ளர்களின் சர்வதேசத் தொழிலாளர் பாராளு மன்றம் கூடியது. 18 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேரப் போராட் டத்தை முன்னெடுத்துச் செல்வது என்று முடிவு செய்தனர். 1890 மே 1 ஆம் நாள், அனைத் துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்த அறைகூவலே, மே முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தினமாக – மே தினமாக வருவதற்குக் காரணமாக அமைந்தது. அடுத்த ஆண்டிலிருந்து உலக நாடுகள் பலவற்றில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு தினத்திற்கு பிறகும் வரலாறு ஒன்று புதைந்து கிடக்கின்றது . அந்த வரலாற்றினை அறிந்துகொண்டு கொண்டாடும்போது உண்மைத்தன்மையோடு கொண்டாடிட வாய்ப்பு கிடைக்கும் .

தொழிலாளர்கள் வாழ்க !

பாமரன் கருத்து

Exit mobile version