கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கக்கூடிய [குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி?] இந்நூலை திரு விமலநாத் MA MBA அவர்கள் எழுதியிருக்கிறார் .நீங்கள் விரும்புவதை அடைய வழிசொல்ல ஒரு நூல் தேவை என்பதாலும் அதனை மேலாண்மை படித்த ஒருவரே எழுதினால் நன்றாக இருக்கும் என கருதியதாலும் இந்த நூலை விமலநாத் அவர்களை எழுதச்சொல்லியிருப்பதாக பதிப்பகத்தார் தெரிவித்துள்ளனர் .
இந்த புத்தகத்தில் நமது குறிக்கோளினை அறிவது எப்படி ? அதனை அடைய நம்மை தயார் செய்துகொள்வது எப்படி ? என விவரித்துள்ளார் ஆசிரியர் .
குறிக்கோளை திட்டமிடுதல் பகுதியில் தோல்வியை தவிர்க்க எவ்வாறு திட்டமிடுதல் அவசியமாகிறது எனவும் நீண்டகால குறிக்கோளின் அவசியத்தையும் விளக்குகிறார் . மேலும் தொழிலில் வரும் பிரச்னைகள் அதனை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் முன்கணிப்பின் முக்கியதுவம் குறித்தும் எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துள்ளார் ஆசிரியர் விமலநாத் .
Download/Buy : குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி [Kurikolai Nirnayippathu Eppadi?]
தொழில் துவங்க ஆரம்பிப்போருக்கும் ஏற்கனவே தொழில் நடத்திக்கொண்டிருப்போருக்கும் இந்த புத்தகத்தை வாசித்தால் மாற்றம் உண்டாகும் .
புத்தகம் : தெற்கிலிருந்து ஒரு சூரியன்
நன்றி
பாமரன் கருத்து