Site icon பாமரன் கருத்து

குமாரசாமி முதல்வராகிறார் – இப்போ ஜனநாயகம் வென்றுள்ளாதா ? சில கேள்விகள்

எண்ணிக்கை மட்டுமே பிரதானமாக இருக்கக்கூடிய நம் ஜனநாயகத்தில் தற்போது காங்கிரஸ் மற்றும் JDS+ கூட்டணி (118) இடங்களை பெற்று இருப்பதாக கூறி ஆட்சி அமைக்கிறார்கள் .

குமாரசாமி

இதற்கு முன்னதாக பாஜக 104 இடங்களை வென்று தனி கட்சியாக அதிக இடங்களை பெற்றிருந்தாலும் அவர்களால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற இயலவில்லை . இதனால் பலர் தற்போது ஜனநாயகம் வென்றுள்ளதாகவும் பாஜகவின் திரைமறைவு ஆட்சியை பிடிக்கும் பழக்கத்திற்கு வைக்கபட்ட முற்றுப்புள்ளியாகவும் கொண்டாடுகின்றனர் .

காங்கிரஸ் JDS கூட்டணி ஆட்சி மட்டும் ஐனநாயக வெற்றியா?

உண்மைதான் , பாஜக செய்தது தவறுதான் . அவர்களின் ஆட்சி பறிபோனபின்பு அதற்காக கொண்டாடுகிறவர்கள் அடுத்து அமையவிருக்கும் காங்கிரஸ் JDS கூட்டணி ஆட்சி மட்டும் ஐனநாயக வெற்றியா என உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள் .

கருத்து , கொள்கை வேறுபாடு என அனைத்துமிருந்தும் மக்கள் நலனுக்காகவா தற்போது காங்கிரஸ் JDS கூட்டணி அமைந்திருக்கின்றது , இல்லவே இல்லை பாஜக வந்துவிடக்கூடாது என்கிற ரீதியில் காங்கிரஸ் கட்சியும் இதுதான் கிடைத்த வாய்ப்பு முதல்வராக இருக்க என்கிற ரீதியில் JDS கட்சியும் அமைத்த கூட்டணி இது .

பாஜக செய்தது எப்படி ஐனநாயக விரோதமோ அதனைப்போலவே புதிதாக அமைய இருக்கும் குமாரசாமி ஆட்சியும் ஐனநாயக விரோத ஆட்சியாக மட்டுமே இருக்க முடியும் .

இன்னும் தேர்தல் முறையை மாற்றாமல் இருந்தால் இதுபோன்ற மக்களாட்சி விரோதங்கள் தொடர்ந்து அரங்கேரும் . யார் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள போகிறார்கள் ?

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version