Site icon பாமரன் கருத்து

கிராம சபையை கையிலெடுத்த கமல் | சிறப்பு | Bharat Ane Nenu ஆக ஆட்சியை பிடிப்பாரா ?

அண்மையில் வெளியான தெலுங்கு படம் Bharat Ane Nenu (பரத் ஆகிய நான்) என்னும் படம் அரசியல் தில்லுமுல்லுகளை புட்டு புட்டு வைத்தது. எப்படி எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் ஒன்று சேர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள், எப்படி ஒத்து போகிறார்கள், நல்லவனாக நுழையும் ஒருவன் எவ்வளவு சங்கடங்களை அனுபவிக்க வேண்டும் என அரசியல் பாடம் எடுத்தது இந்த படம்.
மிக முக்கிய திட்டமாக இந்த படத்தின் நாயகன் ஒரு சட்டமன்றத்தில் ஒரு திட்டத்தினை வைப்பார் ” ஒவ்வொரு கிராமத்திற்கும் தேவைகள் மாறுகின்றன, ஒரு கிராமத்திற்கு பள்ளி தேவை என்றால் இன்னொரு கிராமத்திற்கு சாலை, குடிநீர் வசதி தேவைப்படுகிறது. ஆகவே ஒட்டு மொத்த கிராமத்திற்கும் ஒரே மாதிரியான திட்டம் கொண்டுவருவது அவர்களின் சரியான தேவையை பூர்த்தி செய்யாது. ஆகவே தலா ஐந்து கோடி ரூபாயை ஒவ்வொரு கிராமத்திற்கும் வழங்கி, அவர்களே அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறு செய்ய போகிறோம்” என்பார்.
கிராம சபையை கையிலெடுத்த மக்கள் நீதி மய்யம் “கமல்” :

தற்போது கமலஹாசன் அவர்கள் ஆற்றல் மிக்க கிராம சபையின் மூலமாக நாட்டினை வளப்படுத்த முடியும் என்கிற முடிவோடு அதற்க்கான முயற்சியை எடுத்திருக்கிறார். இதற்கென (

ஏப்ரல் 24) அன்று மாதிரி கிராம சபை கூட்டத்தை நடத்தியிருக்கிறார் கமல்ஹாசன். அரசியலில் கொள்கைகளுக்காக விமர்சனங்கள் இருக்கலாம் ஆனால் ஒருவர் நல்ல திட்டத்தை முன்னெடுக்கிறார் என்றால் அதனை பாராட்டவும் அதற்க்கான ஆதரவையும் தெரிவிக்க வேண்டியது நமது கடமை.
இது குறித்து பேசிய அவர்,
கிராம சபை கிராமங்களின் பலம் .
25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கிராமசபை சரியாக பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.
ஒவ்வொரு கிராமத்திற்கும் மக்கள் தொகைக்கேற்ப ஒன்று முதல் ஐந்து கோடி வரை ஒதுக்கப்படும், தமிழகத்தில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை 12524 .
கடந்த ஆண்டின் வரவு செலவு கணக்குகள் மக்கள் முன்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும், மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளித்திட வேண்டும்.
மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிக்காமல் இருக்கவேண்டும் என்பதை போல கிராமசபையின் உரிமையை மாநில அரசு வழங்கிட வேண்டும்.

பாமரன் கருத்து :

கமல்ஹாசன் அவர்கள் கிராமசபை குறித்து புதிதாக எதையும் சொல்லிடவில்லை . ஏற்கனவே இருக்கின்ற கிராமசபை அமைப்பை நன்கு பயன்படுத்தினாலே நாம் முன்னேற முடியும் என அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார் .
சட்டசபை , பாராளுமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்களுக்கு நிகரான மதிப்பு கிராமசபை கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு இருகின்றது . அதனை நாம் முறையாக பயன்படுத்திடவில்லை அல்லது ஆட்சியாளர்கள் விடவில்லை . இதனை முன்னெடுத்துள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் .
நன்றி
பாமரன்

Share with your friends !
Exit mobile version