Site icon பாமரன் கருத்து

#கனவு தமிழ் கவிதை

முடிந்துபோன வாழ்க்கையை துவங்குவது எப்படி

கனவு – கவிதை

மேலும் பல கவிதைகள் இங்கே

சாமானியர்கள் வாழ்வில் 

வறுமை தடுக்கும் வசந்த நிகழ்வுகளை 

அளவில்லாமல் அள்ளிக்கொடுத்து

அற்புதம் நிகழ்த்தும் “கனவு

அதிகாரபலம் பொருந்திய 

பல பயில்வான்களின் தவறுகளுக்கு 

தூக்கம் கெடுத்து தண்டனை கொடுக்கும் 

ஒரே தராசு “கனவு

குரலற்றவர்கள் சத்தமாக 

சங்கீதம் பாட மேடையமைத்தும்

இயலாதவர்கள் இயங்கிட 

களம் அமைத்தும் 

ஆசுவாசப்படுத்துவது “கனவு

வெற்றிச் சிகரம் நோக்கி 

பலரை அழைத்துச்சென்று 

அற்புதம் செய்திடும் 

அற்புதமான தட்சனையில்லாத 

குரு “கனவு

மேலும் பல கவிதைகள் இங்கே

Exit mobile version