Google doodle இன்று (ஏப்ரல் 03) கமலாதேவி சட்டோபாத்யாய் (Kamaladevi Chattopadhyay) அவர்களின் 115 ஆவது பிறந்தநாளுக்காக தனது முகப்பில் டூடுள் போட்டு கொண்டாடியுள்ளது.
சிறந்த பெண்ணியவாதி, சுதந்திர போராட்ட தியாகி, சமூக சீர்திருத்தவாதி என பல முகங்களை கொண்டவர் கமலாதேவி சட்டோபாத்யாய் (Kamaladevi Chattopadhyay).
தனது 14 வயதில் திருமணம் செய்துகொண்டார் , அவரது 16 வயதில் கணவனை இழந்து இளம்வயதிலேயே விதவையானார் .
இருந்தாலும் இவர் படிப்பதற்காக லண்டன் சென்றார் . பிறகு 1927 இல் இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினர் ஆனார் . சுதந்திர போராட்டங்களில் கலந்துகொண்ட இவர் 1930 இல் பிரிட்டிஷ் படையால் கைதுசெய்யப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்கு உரியவரானார் .
பல சாதனைகளுக்கு சொந்தகாரரான இவர் புகழ்வதற்கு உரியவர் . நாமும் அறிந்துகொண்டு புகழலாமே !
Biography of Kamaladevi Chattopadhyay :
தோற்றம் (Birth) : 03/04/1903
மறைவு (Death) : 29/10/1998
பதவிகள் (Positions) :
சங்கீத நாடக அகாதெமியின் துணைத்தலைவர்
பாரதீய நாட்டிய சங்கத்தின் தலைவர்
அகில இந்திய கைவினைஞர்கள் வாரியத் தலைவர்
யுனெஸ்கோவின் உறுப்பினர்
விருதுகள் (Awards Received Kamaladevi Chattopadhyay) :
ராமன் மகசேசே விருது (1966)
பத்மபூசன் (1995)
பத்ம விபூசன் (1987)
இந்தியாவின் தேசிய அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருது
சங்கீத் நாடக அகாடமி விருது
இந்தியாவின் நாடக வளர்ச்சி, கைத்தறி மற்றும் கைவினை பொருள்களின் வளர்ச்சி,நாடக மறுமலர்ச்சி என பன்முக தன்மையுடன் சிறப்பாக செயல்பட்டதனால் கூகுள் நிறுவனம் டூடுள் (Google doodle) போட்டு பெருமைப்படுத்தியுள்ளது.
புத்தகங்கள் (Books written by Kamaladevi Chattopadhyay) :
கமலாதேவி சட்டோபாத்யாய எழுதிய நூல்கள்
இந்திய பெண்களின் விழிப்பு, எவ்ரிமான்’ஸ் பிரஸ், 1939
ஜப்பான்-அதன் பலவீனமும், வலிமையும், பத்ம வெளியீடுகள் 1943.
அங்கிள் சாமின் பேரரசு, பத்ம வெளியீடுகள் லிமிடெட், 1944.
யுத்தத்தால் சீரழிந்த சீனா, பத்ம பப்ளிகேஷன்ஸ், 1944 ல்.
ஒரு தேசிய தியேட்டர், (அனைத்து இந்திய பெண்கள் மாநாடு, கலாச்சார பிரிவு. கலாச்சார புத்தகங்கள்), ஆந்த் பப் நோக்கி. அறக்கட்டளை, 1945
. அமெரிக்கா ,: superlatives நிலம், பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ், 1946. குறுக்கு சாலைகள் தேசிய தகவல் மற்றும் பப்ளிகேஷன்ஸ், 1947.
சோசலிசமும் சமூகம், சித்தன்னா, 1950.
இந்தியாவில் பழங்குடியின வாதம், பிரில் அகாடமிக் , 1978 ஐஎஸ்பிஎன் 0706906527 .
இந்தியாவின் கைவினைப் பொருட்கள் கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் மற்றும் புதிய வயது சர்வதேச பப். லிமிடெட், புது தில்லி, இந்தியா, 1995 ஆம் ஐஎஸ்பிஎன் 99936-12-78-2 .
இந்திய பெண்களின் விடுதலைப் போர்,. தென் ஆசியப் புத்தகங்கள், 1983 , ISBN 0-8364-0948-5 .
இந்திய தரை விரிப்புகள் மற்றும் மிதியடிகள், அகில இந்திய கைவினைப் பொருட்கள் வாரியம், 1974.
இந்திய எம்பிராய்டரி, விலே ஈஸ்டன், 1977.
இந்தியாவின் கைவினை பாரம்பரியம், பதிப்பகப் பிரிவு, ஐ & பி, அமைச்சகம். இந்தியா, 2000-ம் ஆண்டு ஐஎஸ்பிஎன் 81-230-0774-4 .
இந்திய கைவினைப் பொருட்கள், நேச பப்ளிஷேர்ஸ் பி. லிமிடெட், மும்பை இந்தியா, 1963.
இந்திய நாட்டுப்புற நடன மரபுகள்.
இந்திய கைவினைப் பெருமிதங்கள், புது தில்லி, இந்தியா: கிளாரியன் புக்ஸ், 1985.
இன்னர் சரிவுகளில், அவுட்டர் இடைவெளி: வரலாறு, 1986 ஐஎஸ்பிஎன் 81-7013-038-7
கமலாதேவி சட்டோபாத்யாய் தனது 85 ஆவது வயதில் அக்டோபர் 29 1988 இல் மறைந்தார்.