Site icon பாமரன் கருத்து

கலைஞர் கருணாநிதிக்கு இரங்கற்பா கவிதை

கருணாநிதி அவர்களுக்கு இரங்கற்பா கவிதை

கருணாநிதி அவர்களுக்கு இரங்கற்பா கவிதை

இந்திய அரசியலையும் தமிழக அரசியலையும் எழுதினால் இவரை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. அத்தகைய கருணாநிதி அவர்களுக்கு இரங்கற்பா கவிதை
கருணாநிதி அவர்களுக்கு இரங்கற்பா கவிதை

கலைஞருக்கு கவிதை படைப்பது
கதிரவனுக்கு அகல்விளக்கு காட்டுவது
அன்றியே, வேறில்லை அறிவேன்

அவர்தம் தொண்டெண்ணி நன்றெண்ணி
எம்மிடம் உள்ள தமிழ் பூக்களை
மாலையாக்கி மன்னவனின் காலில் இடுவது

தமிழ் குழந்தையாக என் கடமை ….

அன்பு கொண்டோர் புகழ்ந்தாலும்
பேரன்பு கொண்டோர் இகழ்ந்தாலும்
உதட்டோரம் புன்னகையிருக்கும் பாரபட்சமில்லாமல்

இறந்தபின்பு நகை  எதற்க்கு என்பதால்
கண்ணாடி பெட்டிக்குள் புன்னகையை
உன் உதடுகள் உதிர்த்துவிட்டனவோ
காவிய தலைவனே, கலைஞரே ….

“என் உயிரினும் மேலான” என்றவுடன்
கடலலை  போல ஓயாது எழும் தொண்டர்களின் ஆர்ப்பரிக்கும் கரவொலி தான்
எனது மூச்சு சக்தி என
ஒவ்வொருமுறையும் உற்சாகமாக  எழுந்த தமிழ்மகனே !
இன்று கழகத்தாரின் குரல் கேட்டும்
மௌனமாய் வஞ்சிப்பது ஏனோ ?

ஆயிரம் குறைகளை சொல்லி
ஆதவன் உன்னை அடக்கிட நினைத்தாலும்
சூரியனை களிமண் பூசி மறைக்கலாகுமோ ?
நிலவினை போர்வை போர்த்தி
மறைக்கலாகுமோ ?
கடலை கப்பல்கள் நிறுத்தி மறைக்கலாகுமோ?

நீர் செய்த தொண்டுகள் இங்கே ஏராளம்!
உன்னால் தமிழ் வளர்ந்தது ஏராளம்!

சூரியனை நோக்கி பூக்களை வீசினாலும்
கரடுமுரடான கற்களை வீசினாலும்
சூரியனுக்கு பாதிப்பில்லை
வீசுபவன் தலைக்கே பாதிப்புபோய் வா தமிழ் மகனே !
போய் வா  தலை மகனே !

தமிழுலகம் உனக்கு கடமைப்பட்டிருக்கும்

வருத்தங்களுடன் ..






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version