Site icon பாமரன் கருத்து

காற்றின் மொழி – பேசப்படவேண்டிய மொழி

 


 

உங்கள் வீட்டு பெண்கள் , மனைவியோ சகோதரியோ வேலைக்கு செல்லலாம் . அப்படி செல்லுமிடத்தில் உயர் அதிகாரிகள் , உடன் பணியாற்றுபவர்கள்,பிறர் தவறாக பேசலாம் , நடந்துகொள்ள முற்படலாம் . அப்படியொரு நிகழ்வு நடப்பின் உங்களது வீட்டுப்பெண்ணை அந்த நிகழ்வுக்கு பொறுப்பாக்கி தவறாக எண்ணாதீர்கள் . உங்கள் வீட்டுப்பெண் உண்மையானவர் , தூய்மையானவர் என நம்புங்கள். அவர்களோடு ஆதரவாக இருந்திடுங்கள் . அவர்களுக்கும் ஓர் விருப்பமுண்டு , சிகரம் தொட சொந்தக்காலில் நடக்க ஆசையுண்டு என்பதனை உணர்ந்துகொள்ளுங்கள்.

 

காற்றின் மொழி திரைப்படத்தின் உள்ளார்ந்த அர்த்தம் இதனை மையப்படுத்தியது தான் . இதனை தவிர பல உண்மைகளை உணர்வுகளோடு தொட்டுச்செல்கிறது காற்றின் மொழி திரைப்படம்.

 


 

வேலைக்கு செல்லும் பெண்களின் குடும்ப சூழலை பாருங்கள்

 

பெண்களை பார்த்தாலே அங்குதான் பார்க்க தோன்றுகிறது , அவர்களின் உள்ளாடை அளவுகள் என்னவாக இருக்கும் என எண்ண தோன்றுகின்றது . நிலவை பார்த்தாலும் கார் முகப்பு விளக்குகளை பார்த்தாலும் பெண்களின் மார்பகங்களின் நினைவுதான் வருகின்றது என கேட்கும் இளைஞரிடம் ஜோதிகா சொல்லும் பதில் ஒட்டுமொத்த ஆணினமும் கவனிக்க வேண்டிய பதில் .

 

காற்றின் மொழி

 


ஒரு பெண் வேலைக்கு வருகின்றாள் என்றால் அவள் குடும்ப சூழல் என்னவாக இருக்கும் , அவள் வேலைக்கு செல்லாவிட்டால் என்னாகும் என ஒவ்வொரு பெண்ணை பாரக்கும்போதும் நினைத்துப்பாருங்கள் ,உங்களைப்போல அவர்களுக்கும் உணர்வு உண்டு , அவர்களுக்கும் மனசு உண்டு அதனை பாருங்கள் என சொல்லும் ஜோதிகாவின்  பதிலில் வேலைக்கு செல்லும் பல பெண்களின் வேண்டுகோள் இருப்பதனை அறிய முடிகின்றது .

 

 

பிடித்த வேலையை செய்வதே சுகம்

 

வத்தல், பொடி விற்கும் கணவரை இழந்த பெண் . கணவர் இறந்தபின்பு வரக்கூடிய பணத்தில் உட்கார்ந்துகொண்டு சாப்பிட வாய்ப்பிருந்தும் பிடித்த வேலையை செய்வதில் எவ்வளவு சுகம் , நிம்மதி என்பதனை அந்த கதாபாத்திரம் மிக அழகாக சொல்லிச்செல்கிறது .

 

 

காற்றின் மொழி

 

சமையலறையை தாண்டி பெண்களுக்கு கனவுகள் உண்டு



ஜோதிகா ஓர் அடையாளம் . நம்மோடு படித்த நல்ல திறமையான பெண்கள் திருமணத்திற்கு பின்னர் குடும்பம் , பிள்ளை , கணவர் என குறுகிய வட்டத்திற்குள் சமையல் செய்ய மட்டுமே இவள் தகுதியானவள் , வேறொன்றும் செய்ய லாயக்கற்றவள் என குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப்பட்டிடுப்பதை பார்த்திருக்கிறோம் .

 


ஆனால் அவர்கள் திறமையானவர்கள் , அவர்களுக்குள்ளும் ஆசைகள் உண்டு . அதனை தன்னுள்ளே அடக்கிக்கொண்டு நமக்காக சமையலறையில புழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதனை உணர்த்துகின்றது இப்படம் .

 

இதுவரை ஜோதிகா நடித்ததிலேயே இதுதான் சிறந்த நடிப்பு.



தொடர்ந்து சமூகத்திற்கு அவசியமான படங்கள் எடுத்துவரும் இயக்குநர் ராதா மோகன் காற்றின் மொழி திரைப்படத்தின் மூலமாக சிகரம் தொட்டிருக்கிறார் .

ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி .

அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம் .


 

பாமரன் கருத்து

 

Share with your friends !
Exit mobile version