Alert : புற்றுநோயை உண்டாக்கும் Johnson’s talc Powder | Tamil | Johnson & Johnson talc Powder led Cancer
பாமரன் கருத்து
நமது சுற்றுவட்டாரத்தில் அன்றுமுதல் இன்றுவரை குழந்தைகளுக்கு பயன்படுத்துவது ஜான்சன் ஜான்சன் பேபி பவுடர் தான் . அதேபோலத்தான் பெரியவர்களும் கூட டால்கம் (talcum) பொருள்களை பயன்படுத்துகின்றனர் . அந்த பழக்கம் , நம்பிக்கை பாரம்பரியமாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டு வருகின்றது .
தற்போது தங்களுடைய சிறு வயதில் ஜான்சன் ஜான்சன் talc பவுடர் பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய்க்கு (Ovarian Cancer ) ஆளானோம் என 22 பெண்கள் அமெரிக்காவில் தொடர்ந்த வழக்கில் 4 . 7 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தார் நீதிபதி.
அபராதம் ரூ32,200 கோடி
அதே Johnson & Johnson நிறுவனத்தின் talc பவுடரைத்தான் நாமும் பயன்படுத்தி வந்திருக்கிறோம், . இந்த அதிரடியான தீர்ப்பு நிச்சயமாக நமக்கும் முக்கியதுவம் வாய்ந்தது . இனி ஜான்சன் ஜான்சன் நிறுவன பேபி பவுடர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாமா? என்கிற கேள்வியை இந்த தீர்ப்பு எழுப்புகின்றது.
Johnson & Johnson talcum powder cancer case :
கடந்த ஜூலை 22 அமெரிக்காவின் மிஸிஸிப்பி மகாண நீதிமன்றம் Johnson & Johnson நிறுவனத்திற்குபாதிக்கப்பட்டவர்களுக்காக 550 மில்லியன் டாலரும் குற்றத்துக்காக 4.1 பில்லியன் டாலரும் அபராதமாக விதிக்கபட்டது .
இந்த நிறுவனத்தின் டால்கம் பவுடர்கள் (talcum powder) கறுப்பை புற்றுநோயை உண்டாக்கியதாக 22 பெண்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர் . அவர்களில் 6 பேர் தற்போது உயிரோடு இல்லை .
முக்கிய குற்றமே, டால்கம் பவுடர் (talcum Powder) புற்றுநோயினை உண்டாக்கும் வாய்ப்பினை கொண்டுள்ளது என தெரிந்தும் மக்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் விட்டதுதான் .
இந்த தீர்ப்பினை கண்டு ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறியுள்ள நிறுவனம் இதுபோன்று எங்களுக்கு எதிராக வந்த வழக்குகளின் தீர்ப்பினை மேல்முறையீட்டில் மாற்றி பெற்றுள்ளோம் என கூறியுள்ளது .
டால்கம் பவுடர் என்றால் என்ன ? | What is Talcum Powder?
Talcum Powder என்பது பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் talc என்கிற படிமக்கல்லில் இருந்து தயாரிக்கப்படுகிறது . அந்த talc என்பது சிலிகான் , மெக்னிசியம் , ஆக்சிஜன் என்பதன் கலவை .
எகிப்திய காலகட்டத்தில் talc பயன்படுத்தும் வழக்கம் இருந்திருக்கின்றது . talc மென்மையானதாகவும் ஈரப்பதத்தை உறிஞ்சக்கூடிய தன்மையும் கொண்டிருப்பதனால் பயன்படுத்த தொடங்கியுள்ளனர் .
இயற்கையாக கிடைக்கும் talc மூலப்பொருளில் ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) என்னும் வேதிப்பொருள் கலந்திருக்கும் . இது புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்து நிறைந்த பொருள் . 1970 களில் ஆஸ்பெஸ்டாஸ் (asbestos) வேதிப்பொருள் இருக்கும் பொருள்களுக்கு அனுமதியில்லை .
Eva Echeverria என்னும் பெண் ஒருவர் , தான் 11 வயது முதலே நிறுவனத்தின் பவுடரை பயன்படுத்த தொடங்கியதாக தெரிவித்துள்ளார் . தற்போது 63 வயதாகும் அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புதான் புற்றுநோயிலிருந்து மீண்டுள்ளார் .
இதனைப்போல பல பெண்கள் முறையிட்டுள்ளனர் .
உண்மையாலுமே talc Powder கேன்சரை உண்டாக்குமா ?
talc அதனுடைய ஈரப்பதத்தை உறிஞ்சிடும் தன்மையின் காரணமாக பேபி பவுடர் ஆக விற்பனை செய்யப்படும் . குழந்தைகளை குளிப்பாட்டி முடித்தவுடன் தாய்மார்கள் அடிப்பது வழக்கம் . இதேபோன்று பல வடிவங்களில் talc பயன்படுத்தப்பட்டு வருகின்றது .
சில ஆராய்ச்சிகளில் , தொடர்ச்சியாக பிறப்புறுப்பில் talc பவுடரை அடித்திடும்போது 40 விழுக்காடு கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர் .
இன்னும் சில நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் talc இருக்கும் பொருள்களினால் கேன்சர் அபாயம் இல்லை என தெரிவித்துள்ளன .
நிறுவனங்கள் எப்போது உண்மையை சொல்லியிருக்கின்றன
நாம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் ?
இன்றெல்லாம் குழந்தை பிறந்தாலே Johnson & Johnson நிறுவன சோப் , பவுடரை வாங்கிவந்து பயன்படுத்துவதை பாரம்பரியமாக மாற்றிவிட்டோம் அல்லது மாற்றிட வைத்து விட்டார்கள் .
இந்த நம்பிக்கையிலிருந்து விடுபடுங்கள்
நமது முன்னோர்கள் பயன்படுத்திய முறைகளை கண்டறிந்து அவற்றினை பயன்படுத்த தொடங்கிடுங்கள் .அரசு உடனடியாக நடவடிக்கைளை தொடங்க வேண்டும்
அமெரிக்காவில் தொடர்ச்சியாக இந்த நிறுவனம் வழக்குகளை சந்தித்து அபராதம் விதிக்கப்பட்டாலும் இந்தியாவில் அதே பவுடரை எந்தவித எதிர்ப்பும் இன்றி விற்பனை செய்ய அனுமதிக்கிறோம் . இது மிகவும் தவறானது
செயற்கையான பொருள்களை குழந்தைகளின் மீது பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளுதல் நல்லது .பிறப்புறுப்பில் பயன்படுத்துவதை தவிர்க்கலாம் .
இயற்கையான முறைகளுக்கு மாறிடுங்கள் , இன்பமயமாக வாழ்ந்திடுங்கள் .