“By every usual standard, I was the biggest failure I knew.”
எந்த விதத்தில் பார்த்தாலும் எனக்கு தெரிந்தவரையில் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தவள் நானாகத்தான் இருப்பேன் – ஹாரிபாட்டர் என்ற நாவலின் மூலமாக பில்லியனர் ஆக மாறிய முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமைக்கு உரிய ஜே கே ரௌலிங் சொன்ன வார்த்தைகள் தான் இவை. அடுத்த நாவல் எப்போது வரும்? ஹாரிபாட்டருக்கு என்னவாகும்? என உலகம் முழுமைக்கும் இவரது அடுத்த பதிவிற்காக காத்திருந்தவர்கள் கோடி. இவருடைய புத்தகங்கள் 73 மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு கிட்டத்தட்ட 20 மில்லியன் பணத்தை சம்பாதித்த இவர் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நபரா? என உங்களின் புருவம் உயரலாம். ஆனால் அதுதான் உண்மை. பல சுயமுன்னேற்ற கட்டுரைகள் எழுதப்பட்டு இருந்தாலும் இந்த கட்டுரை சிறப்பு வாய்ந்தது.
ஹாரிபாட்டர் எழுதவேண்டும் என்ற எண்ணம் உதித்து அதற்கான பணியினை ரௌலிங் ஈடுபட துவங்கிய உடனே அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது, அவர் நேசித்த அவருடைய அம்மா மறைவு அவரை நிலைகுலையச்செய்தது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வர முடியாமல் திணறிய ரௌலிங் ஹாரிபாட்டர் எழுதுவதை நிறுத்திவிட்டார்.
இப்படியே இருந்தால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என நினைத்த ரௌலிங் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு போர்ச்சுகளில் ஆசிரியர் பணிக்கு சென்றார். வெளிநாட்டை தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம், தன்னுடைய கவலைகளை மறப்பது, ஓய்வு நேரங்களில் புத்தகத்தை எழுத துவங்குவது என்ற இரு காரணங்களுக்கத்தான். ஓராண்டு கழித்து நாடு திரும்பும் போது முதல் பகுதியை எழுதி முடித்திருக்கவேண்டும் என நினைத்திருந்தபடி புத்தகத்தை எழுதி முடிக்க முடியவில்லை. அதற்க்கான சூழல் அமையவில்லை.
அம்மாவின் இழப்பு, புத்தகத்தை எழுதி முடிக்க முடியவில்லை என தோல்விக்கு மேல் தோல்வியை தழுவிய ரௌலிங் திருமண வாழ்விலும் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேர்ந்தது, அவருக்கு விவாகரத்து நடந்தது. அப்போது அவருக்கு பணியில்லை , கைக்குழந்தையோடு எப்படி வாழ்க்கையை நகர்த்த போகிறோம் என்ற கவலை அதிகரித்தது. இதனால் மிகவும் அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளானார் ரௌலிங். இவ்வளவு தோல்விகளை சந்தித்தாலும் மன உளைச்சலில் இருந்தாலும் புத்தகம் எழுதுவது சற்றே ஆறுதலை தந்தது, அது அவருக்கு பிடித்தமானதாக இருந்தது. ஒருவாறாக ஹாரிபாட்டர் புத்தகத்தின் மூன்று பகுதிகளை எழுதி முடித்தார் ரௌலிங்.
நிராகரிப்பு நிராகரிப்பு நிராகரிப்பு
உலகம் முழுமைக்கும் கோடிக்கணக்கான புத்தகங்கள் எழுதப்படுகின்றன ஆனால் அவை அனைத்தும் வெளியாவது இல்லை. அதுவும் புதிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் என்றால் சொல்லவேண்டியதே இல்லை. எழுதி முடித்த பதிப்புகளை பதிப்பாளர்களுக்கு அனுப்ப துவங்கினார் ரௌலிங். அவர்கள் அவருடைய புததகத்தை படித்தார்களா என்றே தெரியவில்லை. ஏனென்றால் அனுப்பிய வெகு விரைவிலேயே அவரது புத்தகம் நிராகரிக்கப்பட்டது. தனது மின்னஞ்சல் முழுமைக்கும் “rejected” என்ற வார்த்தையினால் நிரம்பியிருந்ததாக குறிப்பிடுகிறார் ரௌலிங்.
நீங்கள் என்னை குறைத்து மதிப்பிட்டுவிட்டீர்கள் என கத்தியது போல இருந்தது
இறுதியாக அந்த தருணம் வந்தது, Bloomsbury எனும் கம்பெனி அவருடைய புத்தகத்தை வெளியிட சம்மதம் தெரிவித்தது. மற்றவர்கள் நிராகரிக்கும் போது இந்த கம்பெனி ஒப்புக்கொண்டு வெளியிட வந்தது எதனால் என்பது இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம். அந்த எடிட்டர் ரௌலிங் எழுதிய புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கிறார், அப்போது உடனிருந்த அவரது 8 வயது மகளுக்கு அது பிடித்துபோய்விட இன்னும் படியுங்கள் இன்னும் படியுங்கள் என நச்சரிக்கிறார். பிறகுதான் அந்த கம்பெனி ஹாரிபாட்டர் புத்தகத்தை வெளியிடுகிறார்கள். முதல் பதிப்பான “Once Harry Potter and the Sorcerer’s Stone” வெளிவந்தவுடன் மிகப்பெரிய வரவேற்பை அது பெறுகிறது. தனது படைப்பை நிராகரித்தவர்கள் முன்னால் சென்று “நீங்கள் என்னை குறைத்து மதிப்பிட்டுவிட்டீர்கள்” கத்தி சொல்வதைப்போல சந்தோசத்தை பெற்றார் ரௌலிங்.
அதற்கு பிறகு அவரது வாழ்வில் அனைத்துமே ஏறுமுகம் தான். பல மில்லியன் புத்தகங்கள் விற்றுத்தீர்ந்தன. படத்திற்க்காகவும் அவரது நாவல் வாங்கப்பட்டது. இதன்மூலமாக பில்லியனராக ஒரு பெண் எழுத்தாளர் உருவானார், அது நான் தான் என ரௌலிங் தன்னைத்தானே மெச்சிக்கொள்ளும் அளவிற்கு அவர் உயர்வடைந்தார்.
நினைத்துப்பாருங்கள் நண்பர்களே, ரௌலிங் தனக்கு பிரச்சனைகள் ஏற்பட்டபோதெல்லாம் மீண்டு வராமல் போயிருந்தால் என்னவாகிருப்பார்? இன்று நிம்மதியை தேடி அலைகின்ற ஒரு பெண்ணாக அவர் சராசரி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பார். தனித்து குழந்தையுடன் விடப்பட்ட தருணத்திலும் விடாமுயற்சியோடு தான் நம்பியதை செய்தார், பல நிராகரிப்பிற்கு மத்தியிலும் அடையாளம் பெற முயற்சித்துக்கொண்டே இருந்தார். இன்று பில்லியனராக வலம் வருகிறார்.
ரௌலிங் சொல்வது இதுதான் “பிரச்சனைகள் தோல்விகளை சந்திக்காமல் எவராலும் வாழவே முடியாது, அது எந்த தருணத்திலாவது வந்தே தீரும். அதிலிருந்து எப்படி மீண்டு வரப்போகிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது”.
நீங்களும் முயன்றால் வெல்லலாம்!
இந்தக்கட்டுரை பிடித்தால் ஒரு குட்டி கமெண்டை பதிவிடுங்கள். உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
சுய முன்னேற்றக்கட்டுரைகள் படிக்க
ஏன் நீங்கள் எப்போதும் பெரிதாக சிந்திக்க வேண்டும்?
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!