Site icon பாமரன் கருத்து

எதற்குள் இன்பம் ஒளிந்திருக்கிறது தெரியுமா?

Do-you-know-that-your-happiness-lies-in-your-hands-only

Do-you-know-that-your-happiness-lies-in-your-hands-only

ஒவ்வொரு மனிதனும் சந்தோசத்தை தேடித்தான் அலைகிறான். ஆனால் பணத்தில் கொழிப்பவனும் நிம்மதியாக இல்லை என்கிறான் ஏழையும் நிம்மதியாக இல்லை என்கிறான். பிறகு இன்பம் எங்கிருக்கிறது?.
Do-you-know-that-your-happiness-lies-in-your-hands-only

பரவலாக மனிதர்களிடம் ஓர் எண்ணம் இருக்கின்றது , பெரியதாக இருந்தால் அல்லது கூடுதல் விலையுள்ளதாக இருந்தால் தான் நிம்மதியாக சந்தோசமாக இருக்கமுடியும் என்பதுதான் அந்த எண்ணம் . குறைந்த சம்பளம் வாங்குபவனுக்கு  பெரிய சம்பளத்திலும், சிறிய சைக்கிளில் பயணிப்பவனுக்கு பைக்கிலும் , பைக்கில் பயணிப்பனுக்கு காரிலும் , சிறிய வீட்டில் இருப்பவனுக்கு பெரிய வீட்டிலும் நிம்மதி, மகிழ்ச்சி ஒளிந்திருப்பதாக எண்ணம் . உண்மையில் இன்பம் இவற்றில் தான் ஒளிந்திருக்கிறதா ?

இன்பம் எங்கிருக்கிறது?

பெரிய பெரிய பொருள்களில் தான் இன்பம் ஒளிந்திருக்கிறது. நிச்சயமாக இது தவறாகத்தான் இருக்கும் . காரணம் நாம் ஒன்றினை அடைந்தபிறகு அதற்கடுத்து என்ன இருக்கின்றதோ அதில் தான் சந்தோசம் ஒளிந்திருக்கிறது என நினைத்துக்கொள்கிறோம் . இது நாம் தானாக நினைத்துக்கொண்டது அல்ல நண்பர்களே , இந்த வியாபார உலகில் நம்முடைய எண்ணம்  இவ்வாறாதனாக கட்டமைக்கப்பட்டுவிட்டது என்பது தான் உண்மையானதாக இருக்கும் .

 

இதற்கு நாம் ஒவ்வொருவருமே உதாரணமாகத்தான் இருக்கின்றோம் . அடுத்ததை நோக்கியே பயணித்துக்கொண்டு இருக்கின்ற நாம் தற்போது இருக்கின்றவற்றில் இருக்கக்கூடிய சுகத்தையும் நிம்மதியையும் பெற தவறிவிடுகிறோம் , இதுதான் உண்மை . நீங்கள் சிறிய வீட்டில் குடியிருந்தால் பெரிய வீட்டிற்கு செல்ல முயலுங்கள் ஆனால் வீடே இல்லாமல் எத்தனை மக்கள் இருக்கிறார்கள் நமக்காவது இந்த சிறிய வீடு இருக்கின்றதே என்பதையும் நினைவில் கொள்ள தவறாதீர்கள் . அப்படி நினைக்கும்போது மகிழ்ச்சியும் நிம்மதியும் தானாக வந்துசேரும் .

வாழ்க்கை ஒருமுறை மட்டுமே வாய்க்கக்கூடியது . அதில் பெரும்பகுதியினை பொருள் ஈட்டுவதற்காகவும் எதிர்காலத்தில் பிறக்கபோகும் சந்ததிகளுக்காக சொத்து சேர்க்கவும் மட்டுமே பயன்படுத்திடுவது என்பது முட்டாள்தனத்திலும் சிறந்த முட்டாள்தனம் . உழைக்கவேண்டியது நம்முடைய கடமைதான் ஆனால் அத்தனையையும் செய்வது நாம் நிம்மதியாக இருப்பதற்காகத்தான் என்பதை உணர்ந்திருக்க வேண்டும் .

 

பெரியதாக இருக்கின்ற பொருள்களில் நிம்மதியை தேடுவதனை விட்டுவிட்டு சிறியதானாலும் அதனை பெரிதாக நினைத்துக்கொண்டு வாழும் மனத்தினை பெற்றால் தான் நிம்மதியாக இன்பமாக வாழமுடியும் .

 

வாழுங்கள் !





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version