Internet may be not working worldwide in next 48 hours, ICANN says
ICANN இல் மேற்கொள்ளப்பட இருக்கின்ற பாதுகாப்பு மேம்பாட்டு பணிகளுக்காக ( maintanance work ) உலகின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு இண்டெர்நெட் வேலை செய்யாது என செய்திகள் பரவுகின்றன . இந்த செய்தி உண்மையா ? அன்றாட வாழ்க்கையும் அலுவலக மற்றும் வங்கி போன்ற அத்தியாவசிய தேவைகள் அனைத்துமே இண்டெர்நெட் ஐ சார்ந்திருப்பதனால் குழப்பமடைந்து வருகின்றனர் . உண்மையாலுமே அடுத்த 48 நேரத்திற்கு இணையதளம் வேலை செய்யதா ?
ICANN இல் Maintanance Work
Domain Server மற்றும் அதனோடு தொடர்புடைய தொழில்நுட்பங்கள் தான் உலகம் முழுமைக்குமான இணைய சேவைக்கு முக்கிய காரணம் . மிக முக்கிய அப்டேட் ஒன்றினை செய்வதற்காக ICANN அந்த சர்வர் அனைத்தையும் குறிப்பிட்ட நேரத்திற்கு Shutdown செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது . இதனால் தான் இண்டெர்நெட் சேவை உலகம் முழுமைக்கும் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக ICANN அறிவித்தது .
எதற்காக ICANN இல் Maintanance
இணையதளம் வைத்திருப்பவர்களுக்கு DNS என்பது தெரிந்திருக்கும் . DNS என்பது இணையதள முகவரியை (domain) IP எண்ணாக மாற்றி கணிணி போன்றவற்றின் மூலமாக இணையதளத்தை பார்க்க உதவிடும் தொழில்நுட்பம் . Domain Name System (DNS) இல் பாதுகாப்பினை அதிகரிப்பதற்காக cryptographic key ஐ மாற்றிடும் பணியை செய்ய இருக்கின்றது . முக்கியமான பாதுகாப்பு மேம்பாட்டினை செய்வதனை தவிர்க்க முடியாது என கூறியுள்ளது ICANN.
இண்டெர்நெட் சேவை பாதிக்குமா ?
செய்திகள் பரவுவதைப்போல உலகம் முழுமைக்கும் ஒரேயடியாக இணைய சேவை பாதிக்கப்படாது .
சில இணையதளங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்காமல் போகலாம் .
பல இணையதளங்கள் குறிப்பிட்ட நேரம் மெதுவாக இயங்கலாம் .
குறிப்பிட்ட சர்வர்களில் அப்டேட் நடக்கும் போது பிற சர்வர்கள் சரியாக இயங்கும் என்பதனால் ஒரேநேரத்தில் இணையம் முழுவதும் பாதிக்கபடாது .
இந்த அப்டேட்டினால் அடுத்த 48 மணி நேரத்தில் இண்டெர்நெட் இல் சில பிரச்சனைகள் ஏற்படலாம் . ஆனால் ஒட்டுமொத்தமாக முடங்காது .