சமூகவலைத்தளத்தில் உங்களுக்கு கணக்கு இருக்கிறது என்றால் ஒரு செய்தி சேனலுக்கு இருக்கிற பொறுப்புணர்வு மற்றும் கடமை உணர்வு உங்களுக்கும் இருக்க வேண்டும். நாம் செய்கிற Share , Like போன்றவை பிறரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதனை உணர வேண்டும்
ஒரு விசயம் செய்தி சேனலில் சொல்லப்படுவதைக்காட்டிலும் சமூகவலைதளம் வாயிலாக சொல்லப்படும் போது அதிக முக்கியத்துவத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இதற்கு மிக முக்கியக்காரணம், நாம் அறிந்த ஒருவர் அல்லது நம்மைப் போன்றதொரு சாதாரண மனிதர்தான் அந்த செய்தியை பகிர்ந்திருக்கிறார் என்ற எண்ணம் தான். தற்போதைய சூழலில் சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளில் முக்கால்வாசி செய்திகள் பொய்யான செய்திகளாகவே இருக்கிறது. வெறுப்புணர்வினை விதைக்கும் செய்திகளும் எதிர்கட்சிகளை விமர்சனம் செய்திடும் செய்திகளும் அதில் ஏராளம்.
ஏற்கனவே குழந்தை கடத்தல் தொடர்பான வதந்தி சமூகவலைதளங்களில் பரவியதை அடுத்து மலேசியாவில் இருந்து சாமி கும்பிட வந்த 65 வயது ருக்மணி சந்தேகத்தின் பேரில் நடந்த தாக்குதலில் அடித்துக்கொல்லப்பட்டார். நாம் அப்போது “நீங்க பன்ற ஒரு ஷேர் ,லைக் ஒருத்தரோட உயிரை பறிக்குமா ? பறிக்கும் – எப்போது நாம் திருந்தப்போகிறோம்?” இந்தத் தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
ஆனாலும் இதுபோன்றதொரு பொய்யான செய்திகள் சமூகவலைதளங்களில் பரப்பப்படுவதை தடுக்க முடிவதே இல்லை. நாம் உண்மையா பொய்யா என தெரியாமல் ஒரு Share தானே என செய்துவிடுகிறோம். ஆனால் அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை நாம் நினைத்துப்பார்ப்பதே இல்லை. அப்படியொரு சம்பவத்தை தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.
ஹெல்மெட் போடாத மாணவரின் சைக்கிளை பிடுங்கிய போலீசார் – பரவிய வீடியோ
ஹெல்மெட் சோதனையில் போலீசார் மிகத்தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது அந்த வழியாக மிதிவண்டியில் வந்த மாணவர் ஒருவரை ஏன் தலைக்கவசம் அணியவில்லை என காவல்துறை அதிகாரி ஒருவர் பிடித்து செல்கிறார் எனக்கூறி ஒரு வீடியோ சமூகவலைதளத்தில் பரவியது. ஏற்கனவே போலீஸ் சோதனையில் விரக்தி அடைந்திருந்ததாலோ என்னவோ மிகத்தீவிரமாக இந்த வீடியோ பகிரப்பட்டது.
இந்த நிகழ்வு நடந்தது தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பகுதியில். அந்தப்பகுதியில் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிவருபவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்துவந்தனர். அந்த வழியாக சென்ற 7 ஆம் வகுப்பு படிக்கிற மாணவர் ஒருவர் கைகளை விட்டுவிட்டு சைக்கிளை அந்தப்பகுதியில் ஓட்டியதாகவும் அதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதனை மாணவருக்கு உணர்த்திடவே சைக்கிளை வாங்கி சற்று நேரம் வைத்திருந்ததாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.அப்போது அந்த வழியாக மிதிவண்டியில் வந்த மாணவர் ஒருவரை ஏன் தலைக்கவசம் அணியவில்லை என காவல்துறை அதிகாரி ஒருவர் பிடித்து செல்கிறார் எனக்கூறி ஒரு வீடியோ சமூகவலைதளத்தில் பரவியது. ஏற்கனவே போலீஸ் சோதனையில் விரக்தி அடைந்திருந்ததாலோ என்னவோ மிகத்தீவிரமாக இந்த வீடியோ பகிரப்பட்டது.
இப்போது புரிந்து என்னவாகப்போகிறது?
அட இது தெரியாம நாமளும் ஷேர் செஞ்சுட்டமே அல்லது போலீசாரை தப்பா நெனச்சுட்டோமே என நினைக்கலாம். இந்த வீடியோ பகிரப்பட்டதனால் மிகப்பெரிய அசம்பாவிதமோ அல்லது சங்கடமோ பெரிதாக ஏற்படவில்லை. ஆனால் ஒவ்வொருநாளும் பல வீடியோக்களை எதனையுமே கண்டுகொள்ளாமல் தானே பலர் ஷேர் செய்கிறோம். ஷேர் செய்துவிட்டு பிறகு வருந்துவதனால் எதுவும் ஏற்பட்டுவிடாது. அதனை பார்த்தவர்களிடம் மீண்டும் உங்களால் சென்று உண்மையை சொல்லிட முடியாது. இதுவே பிறரது மானத்தையோ உணர்வையோ பாதிக்கிற விசயமாக இருந்திருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்ளக்கூட வாய்ப்பு இருக்கிறது.
சமூகவலைத்தளத்தில் உங்களுக்கு கணக்கு இருக்கிறது என்றால் ஒரு செய்தி சேனலுக்கு இருக்கிற பொறுப்புணர்வு மற்றும் கடமை உணர்வு உங்களுக்கும் இருக்க வேண்டும். நாம் செய்கிற Share , Like போன்றவை பிறரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதனை உணர வேண்டும்.
செய்வோமா?
Join with me :
எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!