மங்குனி : அய்யா என்னத்த அப்படி டிவி ல உத்து பாத்துட்டு இருக்கீங்க
மணியன் : அடேய் மங்குனி இன்னைக்கு நம்ம பிரதமரு தந்தி டீவியோட 75 வது ஆண்டுவிழாவில்
கலந்துக்க சென்னை வந்து பேசுனத போடுறான்டா ..வா பாப்போம்
மங்குனி : ஆமா அவரு இந்தில கே கே னு சொல்லுவாரு ஒன்னும் புரியாது ..நீங்களே வேடிக்கை பாருங்க
மணியன் : உனக்கு விஷயம் தெரியாதா, தமிழ் ல பேசினாராம் டா இன்னைக்கு
மங்குனி : என்னய்யா சொல்லுறீங்க
மணியன் : “வணக்கம், தந்தி டிவி பவள விழாவில் உங்களுடன் இருப்பதில் மகிழ்ச்சினு” சும்மா தமிழ்லையே
விட்டு விளாசிட்டராம். அரங்கமே சும்மா அதிருச்சம்டா …
மங்குனி : இதுக்கே இப்படியா…
மணியன் : அடேய் உனக்கு விஷயம் புரியாது. இங்க இருக்குற பாஜக காரவங்க மாதிரி இல்ல மோடி. அவரு பேச்சை கேட்டா எவனும் மயங்கி போவான்.
மங்குனி : அப்போ மோடி தமிழ் கத்துக்கிட்டு நம்ம ஆளுங்ககிட்ட பேசினா பாஜக ஆட்சிக்கு வாய்ப்பு இருக்குனு சொல்லுறீங்களா ?
மணியன் : ஆட்சிக்கு வாய்ப்பு இருக்கோ இல்லையோ , நிச்சயமா பாஜக வுக்கு கொஞ்சம் ஆதரவு அதிகமாகும்.
மங்குனி : பேசாம H ராஜா தமிழிசை பொன் ராதாகிருஷ்ணன் போன்றவர்களை பேசவிடாம செஞ்சுட்டு மோடிக்கு தமிழ் கத்துக்குடுத்து அவரையே பேச சொல்லலாம் போலயே.
மணியன் : இது நடக்காதுன்னாலும் அதுதான் உண்மை. அவரு நல்லா பேசுவாரு. தமிழ்நாட்டுல ஆட்சியை பிடிக்கணும்னா நல்லா பேசவும் வேணுமே
மங்குனி : அதுக்குதான் நம்மள இந்தி கத்துக்க சொல்லுறாங்களோ !!!!
பாமரன் கருத்து