நடந்து முடிந்த திரிபுரா சட்டசபை தேர்தலில் பிஜேபி கூட்டணி 25 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது… இதனை அக்கட்சியினர் கொண்டாடிவருகின்றனர்.. அதே சமயத்தில் , திரிபுராவில் தோழர் லெனின் சிலை உடைக்கப்பட்டது …
“திரிபுராவில் , 2013 -ஆம் ஆண்டு வெற்றிபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களின் தொடர்வெற்றியை போற்றும் வகையில் கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் சிலையை நிறுவினர்…”
இதற்கு, அக்கட்சியிலிருந்து (பிஜேபி) எவ்வித எதிர்ப்பும் வரவில்லை… மாறாக, பிஜேபியின் தேசிய தலைவர் H. ராஜா அவர்கள் ” லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை ” என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்…
திரு. ராஜாவிற்கு எதிராக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் ” முடிந்தால் பெரியார் சிலையை தொட்டுப்பார் ” எனவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்… இருவேறு கட்சிகளின் தலைவர்களே
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியிருப்பது அநாகரீக அரசியலை ஆரம்பிப்பதுபோல் உள்ளது..
தற்பொழுது, திரு.ராஜாவிற்கு எதிராக கோவையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது…
இதுபற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரரஜன் கூறுகையில் ” இது H. ராஜா அவர்களின் தனிப்பட்ட கருத்து .. பாஜகவின் கருத்து அல்ல … மேலும் , ராஜா அவர்கள் தன்பதிவை நீக்கிவிட்டார் ” எனக்கூறிவிட்டுச் சென்றார்.
ஏற்கெனவே விஜய்யின் மெர்சல் பட பிரச்சனையில் “ஜோசப் விஜய்” எனக்கூறி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார்… தற்பொழுது பெரியாரின் சிலையை உடைப்போம் எனக்கூறி கலவரத்தை ஆரம்பிக்கிறார்… ராஜா போன்ற உயரிய பதவியில் உள்ளவர்கள் தங்களின் கருத்துகளை நன்கு சிந்தனைசெய்து பதிவிடவேண்டும்.. அவ்வாறு, பிரச்சனையை தூண்டும் வகையில் பேசுபவர்களை அக்கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது காவல்துறை கைதுசெய்திட வேண்டும்…
உங்கள் கருத்துக்கள் இடம்பெற விரும்பினால் எழுதி admin@pamarankaruthu.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள் . உங்கள் கட்டுரை/கருத்து உங்களது பெயரிலேயே வெளியிடப்படும்.
வாசகர்
க வினோத் குமார்