Site icon பாமரன் கருத்து

அந்த “மூன்றுநாள்” ரத்த சரித்திரம்

 

அற்புத சக்தி கேட்டு
ஆண்டவனிடம் வேண்டினாள்
பெண்ணொருத்தி !

பூரித்த ஆண்டவன்
பிள்ளைபெறும் பேரினை
பெண்ணுக்களித்தான் !

பரிசை பயன்படுத்த
விதியொன்றை விதித்தான்
எல்லாம் வல்ல இறைவன் அவனே !

அதுவே “மூன்றுநாள்”

கடவுளாய் பார்க்கும் மாதர்கள்
கோடி வீட்டிற்கு வெளியே
சுருண்டு படுத்திருக்கும்

கண்ணே மணியே கொஞ்சல்கள்
மறந்து கணவன் என்போம்
கண்டுகொள்ள மறப்பான்

ரத்தம் வழிந்தொழுக
வலியோ உயிர் பிடுங்க
தீட்டு பெயரில் ஒதுங்கியிருப்பாள்

பெண்ணாய் பிறந்ததனால்
நமக்கிந்த கொடுமையோ
என்றெண்ணி பெண்ணிண்

“மூன்றுநாள்” முடியும்

பேசா பொருளான
மூன்றுநாள் சமாச்சாரம்
பேசும் பொருளாக வேணும்

பெண்ணுக்கு பணிசெய்து
பார்த்துக்கொள்ளும் நல்மனம்
ஆணுக்கு அமைய வேணும்

ரத்தம் வருதல் இயற்கையே அன்றி
தீட்டு அல்ல என்றொரு தெளிவு
மானுடம் பெற்று போற்றுதல் வேணும்

வெட்கம் கலைத்து நிமிரு பெண்ணே
நீ முதலில் உணரு கண்ணே
காலம் மாறும் காட்சிகள் மாறும்

மூன்றுநாள் ரத்த சரித்திரம்
முடியும்நாள் விரைவிலே வரும்

நன்றி
ஸ்ரீ

Exit mobile version