Site icon பாமரன் கருத்து

How Ultrasound | Sonography Works? | அல்ட்ரா சவுண்டு எப்படி வேலை செய்கின்றது ?

அல்ட்ரா சவுண்டு என்றால் அதிக அதிர்வெண் (High Frequency) கொண்ட ஒலி

ஒலி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்கிறது . அவ்வாறு செல்லும் ஒலியில் சிலவற்றை நமது காதுகளால் உணர முடியும் . சிலவற்றை நம்மால் உணர முடியாது . அதற்கு காரணம் ஒலியின் அதிர்வெண் .

 

20 HZ முதல் 20 KHZ வரையிலான ஒலி மனிதனால் உணரக்கூடியவை .
அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அல்ட்ரா சவுண்டு என அழைக்கப்படுகிறது . இதன் அதிர்வெண் 2 MHz முதல் 18 MHz வரையிலான ஒலி . இவற்றை நமது காதுகளால் கேட்டு உணர முடியாது

அல்ட்ரா சவுண்டு இன் பயன்பாடு? | USE OF ULTRASOUND

நம்முடைய அன்றாட வாழ்வில் இரண்டு மூன்று இடங்களில் இந்த அல்ட்ரா சவுண்டு குறித்து கேள்விப்பட்டிருப்போம் . ஒன்று கர்ப்பிணி பெண்களை மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றால் மருத்துவர் அல்ட்ரா சவுண்டு மூலமாகத்தான் குழந்தையின் நடவெடிக்கையை வளர்ச்சியை பார்ப்பார் .

 

படிக்கும்காலத்தில் வவ்வால்களுக்கு கண்கள் தெரியாது அவை அல்ட்ரா சவுண்டு ஒலியை செலுத்தி அது திரும்பி வருவதை வைத்துதான் பயணிக்கின்றது , இரையை தேடுகிறது என படித்திருப்போம் .

அல்ட்ரா சவுண்டு கருவி எவ்வாறு வேலை செய்கிறது ? | How Sonography Works?

அல்ட்ரா சவுண்டு , ஸ்கேன் செய்யும் கருவியில் பயன்படுத்தப்படுகின்றது . அந்த கருவியிலிருந்து வெளிப்படும் அதிக அதிர்வெண் (High Frequency) கொண்ட ஒலியானது எளிமையான பொருள்களை ஊடுருவிச் செல்லும் . கடினமான , தடிமனான பொருள்களின் மேல் படும்போது ஒலி எதிரொலித்து திரும்பி வரும் . அவ்வாறு வருகின்ற ஒலியை பிடித்து படமாக மாற்றப்படுகிறது .

 

ஒலியினை வைத்து ஸ்கேன் செய்வதால் இதற்கு சோனோகிராபி (Sonography) என பெயர் . மேலும் கதிர்வீச்சுகளை பயன்படுத்தாமல் எதிரொலியை மட்டும் பயன்படுத்துவதனால் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது .

Sonography கருவி கருவின் வளர்ச்சி , சிறுநீரகம் , இதயம் , கல்லிரல் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறியவும் பயன்படுகின்றது .

மற்றவற்றுடன் ஒப்பிடும்போது அல்ட்ரா சவுண்டு (Sonography) சிறப்பானது ஏன் ?

அல்ட்ரா சவுண்டு கருவி எவ்வாறு வேலை செய்கின்றது ? | How Sonography scan body?

அல்ட்ரா சவுண்டு கருவி அல்லது சோனோகிராபி (Sonography) கருவியினை பயன்படுத்துபவர் சோனோகிராபர் (Sonography) என்று அழைக்கப்படுவார் . இவர் கைக்கு அடக்கமான கருவி ஒன்றினை நமது உடலின் எந்த இடத்தில் ஆராய வேண்டுமோ அந்த இடத்திற்கு மேலாக வைப்பார் , அந்த கருவி வெறும் ஒலியினை அனுப்பும் வேலையை மட்டுமே செய்யாமல் அதற்குள் இருக்கும் வேறு கருவிகளின் மூலமாக எதிரொலித்து வருகின்ற ஒலியினையும் வாங்கிக்கொள்ளும் . அவ்வாறு பெறப்படுகின்ற எதிரொலிப்பு ஒலியினை வைத்து படம் தயாரிக்கப்படும் .

 

சோனோகிராபி யிலிருந்து வெளிவரும் மனிதர்களால் கேட்க முடியாத அதிக அதிர்வெண் கொண்ட அல்ட்ரா சவுண்டு நமது உடலில் வைக்கும்போது அவை எளிமையாக தசைகளை ஊடுருவி செல்லும் . கடினமான பொருள்களை சந்திக்கும் போது எதிரொலிக்கும் . பொருள் எவ்வளவு கடினமானதோ அந்த அளவிற்கு எதிரொலிக்கும் ஒலியின் அளவும் இருக்கும் . இதனை வைத்துத்தான் படம்

PAMARAN KARUTHU

Share with your friends !
Exit mobile version