இங்கு சாதனையாளர்கள் பிறப்பது இல்லை , சாதனையாளர்களாக தங்களை வளர்த்துக்கொள்கிறார்கள் . பலருக்கு சமமான சூழ்நிலைகள் , வாய்ப்புகள் இருந்தாலும் சிலரால் மட்டுமே சாதனையாளர்களாக மாறிட முடிகின்றது .
இளைஞர்களுக்கும் படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் சாதனையாளர்களாக மாறுவது எப்படி ? அதற்கு நாம் என்ன செய்திட வேண்டும் ? போன்ற கேள்விகள் இருக்கும் . அப்படிப்பட்ட தேடலில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கு சில வழிமுறைகளை சொல்லிட ஆசைப்படுகிறேன் . கவனமாக படித்திடுங்கள் .
நேர மேலாண்மை என்னும் மந்திரம்
சாதனையாளர்கள் என்பவர்கள் யார் ? ஒன்று சாதாரண சக மனிதனை காட்டிலும் அதிகமாக கற்றவராக இருக்க வேண்டும் அல்லது அதிகமாக உழைப்பவராக இருக்க வேண்டும் . இந்த இரண்டிற்குமே உள்ள ஒரே ஒற்றுமை நேர மேலாண்மையை கையாளும் திறன் தான் .
உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனுக்குமே கொடுக்கபட்ட நேரம் ஒரு நாளைக்கு 1440 மட்டுமே , பணக்காரருக்கு அதிகமாகவோ ஏழைக்கு குறைவாகவோ , அறிவாளிக்கு அதிகமாகவோ முட்டாளுக்கு குறைவானதாகவோ கொடுக்கப்படுவது இல்லை .
சரி நேர மேலாண்மையை கடைபிடித்து நேரத்தை முறையாக செலவிட்டு சாதனையாளராக மாறுவது எப்படி ?
Do hard task FIRST
ஒருநாளில் நமக்கு கடினமான வேலையும் எளிமையான வேலையும் இருக்கின்றதென்று வைத்துக்கொண்டால் முதலில் கடினமான வேலையை செய்துமுடிக்க பழகிக்கொள்ள வேண்டும் .
இதற்காக ABCDE என்கிற முறையை பயன்படுத்தலாம் . அந்த தினத்தில் நாம் கண்டிப்பாக செய்துமுடிக்க வேண்டிய வேலையையும் , கடினமான வேலையையும் A வரிசையிலும் அதற்கு அடுத்த நிலையில் இருக்கக்கூடிய வேலைகளை அதற்கடுத்த நிலையிலும் வரிசைப்படுத்திட வேண்டும் .
அந்தநாளில் செய்துமுடிக்க தேவையில்லை என கருதுகின்ற முக்கியதுவம் அற்ற வேலைகளை E வரிசையில் வரிசைப்படுத்திடலாம் .
வரிசை படுத்துவது முக்கியமல்ல அதன்படி நடப்பது தான் முக்கியம்.
Maintain To Do List
அன்றாடம் பல வேலைகளை செய்யும்போது நாம் என்ன செய்துகொண்டிருக்கின்றோம் , அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்பதனை நினைவில் வைத்துக்கொள்வதென்பது அவ்வளவு எளிதானது அல்ல .
அதற்காக ஒரு சிறிய To Do list ஒன்றினை வைத்துக்கொள்வதென்பது மிகவும் பயனுள்ள ஒன்று . இதனால் நாம் எந்த ஒரு வேலையையும் மறந்துவிடாமல் செய்துமுடித்திட முடியும் .
Split the Task
ஒரு அனுபவசாலி என்பவர் யாரென்றால் கடினமான பெரிய வேலைகளை எவ்வளவு எளிமையாக செய்துமுடிக்கிறோம் என்பதில் தான் இருக்கின்றது . அனுபவசாலிகள் எப்படி கடினமான வேலைகளை செய்துமுடிக்கிறார்கள் ? ஒரே பதில்தான் , அவர்கள் கடினமான பெரிய வேலைகளை சிறிய சிறிய வேலைகளாக மாற்றிக்கொள்வார்கள் .
அவற்றை ஒவ்வொன்றாக முறையாக முடித்து சாதிப்பார்கள் . இதற்கு மிக முக்கியமானது “planning ” . முறையாக பிரித்து செய்யவில்லையெனில் எதிர்பார்க்கப்பட்ட முடிவு கிடைக்காது , குழப்பமே ஏற்படும் .
Pre Preparation
கடினமான வேலையோ எளிமையான வேலையோ முன்னேற்பாடு என்பது சரியாக செய்து முடிக்க உதவுகின்ற மந்திரம் என்றே கூறலாம் . முன்னேற்பாடு என்பது வேலையில் பாதியை முன்னமே சிறிதளவு முடித்துவைப்பது அல்ல .
நாம் என்ன வேலை செய்யப்போகிறோம் , அதற்கான முடிவு என்ன ? அதனை செய்யும்போது என்னென்ன இடையூறுகள் வரலாம் . அவ்வாறு வந்தால் மாற்றுவழி என்ன என்பதையெல்லாம் முன்னரே திட்டமிட்டுக்கொள்ளுதலே “சிறந்த முன்னேற்பாடு ”
சிறந்த முன்னேற்பாட்டுடன் களமிறங்கும்போது எவ்வளவு பெரிய வேலையையும் நினைத்தபடி முடித்து வெற்றிபெற முடியும் .
Adopt Urgency and Pressure
எதிர்பாராத சூழ்நிலைகளில் வருகின்ற வேலைகள் நம்மை அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன . அனைத்து வேலைகளிலும் இப்படிப்பட்ட அழுத்தங்கள் இருந்துகொண்டுதான் இருக்குமென்பதை நாம் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் .
வாழ்க்கையிலும் பணி செய்யும் இடத்திலும் pressure ஐ கையாளத்தெரிந்தவர்கள் வெற்றிபெறுகிறார்கள் .
ஒவ்வொரு நொடியும் உங்களது வெற்றிக்கானது என்பதை உணர்ந்து செயல்பட்டால் வெற்றி உனதே .
பாமரன் கருத்து