மொபைல் போன் வந்த புதிதில் பேச மட்டுமே செய்யலாம் என இருந்தது . ஆகையால் பேசும்போது மட்டும் மொபைலை பயன்படுத்தினோம் . ஆனால் தற்போது கணினியில் செய்யக்கூடியவை , தொலைக்காட்சியில் பார்க்கக்கூடியவை என அனைத்தையுமே சின்னஞ்சிறிய மொபைலில் செய்துவிட முடியும் .
இதன் காரணமாக மக்களுக்கும் மொபைல் போனுக்குமான நெருக்கம் அதிகரித்து தற்போது அதுவே அடிமையாகும் அளவிற்கு வந்து சேர்ந்துவிட்டது . விளைவு சார்ஜ் இல்லையென்றாலோ , நெட் வேலை செய்யவில்லை என்றாலோ , மொபைல் வேலை செய்யாமல் போனாலோ வேதனையின் உச்சத்துக்கே சென்று விடுகின்றனர் .
சரி , இப்படி மொபைல் போனே கதியாக கிடப்பவர்கள் முக்கியமாக இரண்டு விசயங்களினால் தான் அடிமையாகி போகின்றனர் .
சமூக வலைதளங்கள்
விளையாட்டு
மொபைல் போனுக்கு அடிமையாகி அதிகமாக பயன்படுத்துவதால் என்ன பாதிப்புகள் வருகின்றன , அவற்றினை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம் .
Health Issue over Mobile Addictons
கவன சிதறல் :
நாம் ஒரு வேலையை செய்துகொண்டிருக்கும்போது அருகில் மொபைல் போன் இருந்தால் கவன சிதறல் ஏற்பட ஒரு மெசேஜ் வந்தால் போதும் என்கிறார்கள் . மேலும் தொடர்ச்சியாக மொபைல் போனே கதியென கிடப்பவர்களில் பெரும்பாலானவர்களால் பணியில் முழுக்கவனம் செலுத்திட முடிவது இல்லையாம் . என்னதான் பணி செய்து கொண்டிருந்ததாலும் நமக்கு ஏதேனும் நோடிபிகேஷன் வருகின்றதா என பார்க்க தோன்றுவதாகவும் , பல சமயங்களில் வெறுமனே ஆன் செய்து பார்க்கும் பழக்கம் இருப்பதாகவும் கூறுகிறார்கள் .
இது தவிர சாலையை கடக்கும்போதும் , வாகனத்தினை ஓட்டும்போதும் கூட மொபைலால் கவன சிதறலுக்கு உள்ளாகின்றனர் .
கழுத்து வலி :
சராசரியாக மனிதனின் தலை 5 கிலோ கிராம் எடையுள்ளது . தலையை தாங்கும் வேலையை கழுத்துப்பகுதியில் இருக்கக்கூடிய எலும்புகள் மற்றும் தசைகள் தான் செய்கின்றன . அவற்றால் 5 கிலோ கிராம் எடையை தாங்குவது எளிது .
ஆனால் 5 கிலோ எடையுள்ள பொருளை 30 டிகிரி சாய்க்கும்போது 18 கிலோ அளவுள்ள பொருளுக்கான அழுத்தமும் 45 டிகிரி என்றால் 22 கிலோ அளவுள்ள பொருளுக்கான அழுத்தமும் கழுத்துப்பகுதியில் கொடுக்கப்படும் என மருத்துவர்கள் கணக்கிட்டு கூறுகிறார்கள் . இந்த அளவு அழுத்தத்தையும் தாங்கும் திறன் நமது கழுத்துப்பகுதிக்கு உள்ளது .
ஆனால் தொடர்ச்சியாக அதே அளவு அதிக அழுத்தத்தை கொடுப்பதனால் நமது கழுத்துப்பகுதி பாதிப்படைகிறது . இதன் தொடர்ச்சியாக தோள்பட்டையில் பாதிப்பு , நரம்பு மண்டல பாதிப்பு , மூளை பாதிப்பு போன்றவையும் ஏற்படுகிறது .
பார்வை குறைபாடு :
இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் மொபைல் திரையினை பார்க்கும்போது கண்கள் பாதிப்படைகின்றன . தொடர்ச்சியாக அதனை செய்துகொண்டே போகும்போது கண்களின் நரம்புகளில் குறைபாடுகள் ஏற்பட்டு பார்வை குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளது
அதிக மொபைல் பயன்பாட்டில் இருந்து விடுபடுவது எப்படி ?
நோட்டிபிகேஷனை மாற்றுதல் :
நாம் முக்கியமான பணிகளை செய்துகொண்டிருக்கும்போது நமக்கு நோட்டிபிகேஷன் வந்தால் மொபைலை பார்க்காமல் இருக்க முடியாது . ஆகையால் அப்படிபட்ட சூழ்நிலையில் முக்கியமான நபர்கள் மெசேஜ் செய்யும்போது , கால் வரும்போது மட்டும் நோட்டிபிகேஷன் வருமாறு வைத்துக்கொள்ளலாம் .
குறிப்பாக தேவையில்லாத நேரத்தில் இணையத்தை ஆப் செய்து வைப்பது நல்லது .
மனதில் உறுதி வேண்டும் :
எந்தவொரு பழக்கப்பட்டுவிட்ட பழக்கத்தையும் மாற்றிக்கொள்ளுதல் அவ்வளவு எளிதானது அல்ல . அப்படி இருக்கும்போது கடினமான மன உறுதி இருந்தால் மட்டுமே நம்மால் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முடியும் .
ஆகையால் குறிப்பிட்ட நேரம் மொபைலை பயன்படுத்துவது இல்லை என முடிவெடுத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் .
விளையாட்டில் ஆர்வம் காட்டிடுதல் :
பொதுவாக நம்மை பிசியாக வைத்துக்கொண்டாலே பல தீய பழக்கங்கள் நம்மை அண்டாது . மொபைல் பழக்கம் மட்டுமல்ல எந்தவொரு கெட்ட பழக்கத்தையும் விட நீங்கள் முயற்சித்தால் மாற்று பழக்கவழக்கங்களை பழகிடுங்கள் . குறிப்பாக விளையாட்டு போன்றவற்றில் ஈடுபாடு காட்டினால் சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும் .
இவற்றையும் தாண்டி உங்களால் மொபைல் பயன்பாட்டை குறைக்க முடியவில்லையெனில் உடனடியாக சிறந்த மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது .
PAMARAN KARUTHU