உங்களது ஹோஸ்டிங் சர்வரில் WordPress இன்ஸ்டால் செய்வதற்கான ஆப்சன் Cpanel இல் இருக்கும்.
“WordPress” கிளிக் செய்தால் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு இருக்கும். இதில் “install now” ஆப்சனை கிளிக் செய்து wordpress ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்
> Choose your protocol : உங்களது இணையதளம் http அல்லது https இந்த இரண்டில் ஒன்றாகத்தான் இருக்கும். உங்களது இணையதளத்திற்கு SSL என்ற ஒன்றினை வாங்காதவரை http என வைத்திடுங்கள்
> Choose your domain : நீங்கள் எந்த டொமைனை வாங்கினீர்களோ அதனை அந்த இடத்தில் பதிவிடுங்கள்
> In Directory : இந்த இடத்தில் “wp” என இருக்கும். இதனை அப்படியே விட்டுவிட்டால் உங்களது இணையதளம் https://pamarankaruthu.com/wp என வரும் ஆகவே அதனை “blank” ஆக விட்டுவிடுங்கள்
> Site Name : உங்களது இணையதளத்தின் பெயரினை குறிப்பிடுங்கள். உதாரணத்திற்கு “பாமரன் கருத்து” என பதிவிடலாம்
> Site Description – உங்களது இணையத்தளத்திற்க்கான சிறு குறிப்பினை எழுதிடுங்கள்
> Admin User Name – இந்த User Name ஐ வைத்துதான் login செய்ய வேண்டும்
> Admin Password – உங்களது password ஐ கொடுத்திடுங்கள்
அங்கேயே நீங்கள் எந்த URL ஐ பயன்படுத்திட வேண்டும் என்பது இருக்கும். உதாரணத்திற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள போட்டோவில் கொடுக்கப்பட்டுள்ள URL ஐ https://pamarankaruthu.com/wp-admin/ பிரவுசரில் போடுங்கள்
பிறகு நீங்கள் ஹோஸ்டிங் சர்வரில் கொடுத்திருக்கும் User Name, Password ஐ பயன்படுத்தி login செய்யுங்கள்.
இவ்வாறு தான் இருக்கும் உங்களது wordpress window இருக்கும்
உங்களது wordpress window வில் “settings” ஆப்சனை கிளிக் செய்து பின்வருவனவற்றை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.
Site Title
WordPress Address (URL)
Site Address (URL)
Email Address