வாரம் முழுவதும் கடினமாக வேலைசெய்துவிட்டு கிடைக்கும் ஒரே விடுமுறைநாளில் ஓய்வை தவிர வேறென்ன செய்ய முடியும் என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது .
வாரம் முழுவதும் யாருக்காகவோ வேலை செய்கின்ற நாம் , கிடைக்கும் ஒரே விடுமுறை நாளை நமக்கான நாளாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்குமே என்பது என் கருத்து .
தனிமையில் கொஞ்சநேரம் இருங்கள் :
தனிமை ஒவ்வொரு மனிதனுக்கும் அற்புத சக்தியை கொடுக்க கூடியது . ஞாயிற்றுகிழமை காலையில் எழுந்து கொஞ்சநேரம் அமைதியாக இந்த நாளை நான் எனக்காக செலவிட போகிறேன் என நினைத்துக்கொள்ளுங்கள் .
இன்றைய தலைமுறையினரின் மிகபெரிய பிரச்சனை வேலையை தவிர வேறு எதுவுமே செய்யாமலிருப்பது தான் . பலரிடம் கேட்டால் “வேலை செய்வதற்க்கே நேரம் போதவில்லை ” என்கிறார்கள் . இதுதான் நம்மில் பலரின் பிரச்சனை .
உழைத்து களைத்துப்போன உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்க சிறிது உடற்பயற்சி எடுத்துக்கொள்ளுங்கள் .
திருமணமானவராக இருந்தால் உங்கள் மனைவியோடு சிறிது தூரம் நடக்கலாம் . குழந்தை இருப்பின் குழந்தையோடு விளையாடலாம் .
பேசுங்கள் பழகுங்கள் :
நட்பு வட்டத்தை வடிவமைத்துக்கொள்ளுங்கள் . அவர்களோடு சிறிது உரையாடுவது ஏதேனும் நல்ல காரியங்களை செய்வது என உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் .
குறைந்தபட்சம் ஒரு புது மனிதரையாவது சந்தியுங்கள் .
அடுத்த வாரத்திற்கு தயாராகுங்கள் :
ஞாயிற்றுக்கிழமையை ஓய்வுநாளாக கடந்துவிட்டு படபடப்போடு திங்கட்கிழமை ஓடினால் அந்த வாரமே அமைதியற்று போகும் . ஆகையால் அடுத்த வாரத்திற்கு தயாராக சில முன்னேற்பாடுகளை செய்து வைத்துக்கொள்ளுங்கள் .
துணியை தேய்த்து வைப்பது , பைல்களை எடுத்து வைப்பது போன்ற முன்னேற்பாடுகளை செய்யலாம் .
இந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் .
நன்றி