அடுத்த தலைமுறை முழுவதையுமே தொழில்நுட்பம் தான் ஆளப்போகிறது. அதற்க்கு நம் பிள்ளைகளை தயார் செய்ய வேண்டாமா? பாடங்களை படிக்க சொல்வதைவிட செயல்முறை கல்வியில் குழந்தைகள் அதிகம் கற்றுக்கொள்வதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அப்படி நினைக்கும் பெற்றோரில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த தொடர் நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கலாம்.
[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]
காந்தம், சிறுவயதில் நம்முடைய ஆச்சர்யத்தையும் ஆர்வத்தையும் ஈர்க்கின்ற ஒரு பொருள். காகிதத்தின் மேல் சிறு சிறு இரும்பு துகள்களை வைத்துவிட்டு காகிதத்திற்கு கீழே காந்தத்தை வைத்து உரசிடும் போது இரும்பு துகள்கள் அசைவதை கண்டு ஆச்சர்யம் அடைந்திருப்போம்.
தேவையான பொருள்கள்
3 இன்ச் அளவுள்ள ஆணி அல்லது அதனைபோன்ற கம்பி
3 அடி நீளமுள்ள காப்பர் ஒயர்
பேட்டரி (D Size)
காந்தத்தால் ஈர்க்கக்கூடிய சிறிய துகள்கள்
செய்முறை
ஆணி அல்லது அதுபோன்ற கம்பியை எடுத்துக்கோள்ளுங்கள் . காப்பர் ஒயரினை வரிசையாக சுற்றவும் (ஒன்றின் மேல் ஒன்றாக சுற்றிட கூடாது ). பிறகு ஒயரின் ஒரு முனையை பேட்டரியின் ஒருபக்கமும் மறுமுனையை பேட்டரியின் மறுபக்கமும் இணைத்திடுங்கள் . மின் காந்தம் தயார் , இரும்பு துகள்களை அருகிலே வைத்து சோதித்துப்பாருங்கள் . காந்தம் வேலை செய்யும் .
மின் காந்தம் எப்படி வேலை செய்கின்றது ?
காந்தங்களில் இரண்டு வகை உண்டு , நிரந்தர காந்தம் மற்றும் மின் காந்தம் . Permanent Magnet இன் காந்தத்தன்மையை நம்மால் ON அல்லது OFF செய்திட முடியாது . ஆனால் மின் காந்தத்தை நம்மால் ON அல்லது OFF செய்திட முடியும் .
ஆணியில் சுற்றப்பட்டிருக்கும் ஒயரில் செல்லும் மின்சாரமானது ஆணியின் மூலக்கூறு கட்டமைப்பை மாற்றுவதனால் ஈர்க்க கூடிய பண்பினை அது பெறுகிறது . மின்சாரத்தை நிறுத்திடும் போது மீண்டும் பழைய நிலைக்கே வந்துவிடுவதனால் காந்ததன்மையை இழந்துவிடும் .
என்ன நண்பர்களே , வீட்டிலேயே காந்தம் செய்துபார்க்க தயாரா ? பெற்றோர் அல்லது பெரியவர்களின் கண்காணிப்பில் அறிவியல் சோதனைகளை செய்துபாருங்க …
சந்தேகங்கள் , சொதப்பல்கள் இருந்தால் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க …
பாமரன் கருத்து