வேர்ட்பிரஸ் (WordPress) இல் உங்களுக்கு பிடித்த Theme ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டுமெனில் அதற்கு படத்தில் காட்டப்பட்டுள்ள “Add New Theme” ஆப்சனை கிளிக் செய்யுங்கள்
Appearance > Themes > Add New Theme
Upload Theme : இந்த ஆப்சனை பயன்படுத்தி நீங்கள் ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்திருக்கக்கூடிய “Theme” ஐ இன்ஸ்டால் செய்யலாம்.
WordPress Theme டவுன்லோட் செய்ய : https://wordpress.org/themes/
Direct Theme Install : மேலேயுள்ள Upload Theme ஆப்சனை பயன்படுத்தாமல் கீழே இருக்கும் search ஆப்சனை பயன்படுத்தியே கூட நீங்கள் எளிமையாக இன்ஸ்டால் செய்யலாம்.
Theme Feature Filter : இந்த ஆப்சனை பயன்படுத்தி உங்களுக்கு என்ன மாதிரியான தேவைகள் “Feature” உங்களது இணையதளத்திற்கு வேண்டுமோ அதனை குறிப்பிட்டு Search செய்தால் உங்களுக்கு ஏற்ற “Theme” ஐ பெறலாம்.
குறிப்பு : நீங்கள் வேறு பல இணையதளங்களில் இருந்து கூட உங்களுக்கு ஏற்ற Theme ஐ டவுன்லோட் செய்யாலாம். நீங்கள் நெடுநாள் இணையதளத்தை பயன்படுத்த போபவராக இருந்தால் இலவச theme களை பயன்படுத்துங்கள் அல்லது பணம் செலுத்தி பயன்படுத்துங்கள். சில இணையதளங்களில் கிடைக்கும் Crack theme களை பயன்படுத்தினால் அது பல நேரங்களில் பிரச்சனைகளை கொடுத்துக்கொண்டே இருக்கும்
நீங்கள் ஏற்கனவே பயன்படுத்துகின்ற WordPress Theme பிடிக்கவில்லை அல்லது சில ஆப்சன்கள் இல்லை என கருதினால் எந்த நேரத்திலும் எளிமையாக வேறு theme ஐ செலக்ட் செய்து மாற்றிக்கொள்ளலாம். அவ்வாறு மாற்றிடும் போது புதிய theme க்கு ஏற்றவாறு சில மாற்றங்களை (Modification) செய்ய வேண்டி இருக்கும் .