Site icon பாமரன் கருத்து

How to apply loan online by Pradhan Mantri Vidya Lakshmi Scheme | ஆன்லைனில் Education லோனுக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி அவர்கள் 2015 – 16 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையின் போது ” உலகிலேயே இந்தியா தான் மிகவும் இளமையான நாடு அதாவது தனது மக்கள் தொகையில் 54% 25 வயதுக்கு குறைவான இளைஞர்களை கொண்ட நாடு. கிட்டத்தட்ட 60 கோடிகளை தாண்டுகிறது இந்த எண்ணிக்கை. 21 ஆம் நூற்றாண்டில் இந்த இளைஞர்கள் அனைவரும் வேலை பெரும் வண்ணம் Skill India திட்டத்தை முறையாக செயல்படுத்தி Make in India திட்டத்தோடு இணைக்கும் வண்ணம் செயல்பட வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார்.

 

இதற்காக ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறைகளை எடுத்து படிக்க பணம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதை உணர்ந்து முற்றிலும் இணைய வழியில் வங்கிகளில் லோன் பெரும் முறையை அறிமுகப்படுத்துகிறோம். இதற்காக கொண்டுவரப்பட்டது தான் Pradhan Mantri Vidya Lakshmi Karyakram திட்டம்.

வங்கிகளுக்கு மாணவர்கள் சென்று லோன் கேட்கும் போது அவற்றை பல வங்கிகள் நிராகரித்து விடுகின்றன. அரசு கொடுக்க சொன்னாலும் அவர்கள் கொடுப்பதில்லை. ஆனால் இந்த முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது அனைத்து மாணவர்களுக்கும் லோன் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது” என்றார்.

How to apply loan by Pradhan Mantri Vidya Lakshmi Karyakram Scheme ?

வித்யா லட்சுமி திட்டத்தின் படி லோனுக்கு விண்ணப்பிக்க மாணவர் பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்த வேண்டும்.

Step 1 : இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள்

https://www.vidyalakshmi.co.in/Students/login

Step 2 : புதிதாக செல்கிறீர்கள் என்றால் “Register Now” ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.

Step 3 : அதில் பின்வரும் தகவல்களை கவனமாக பதிவிடுங்கள்

> Title
> First Name [உங்களது பெயர்]
> Middle Name [Optional]
> Last Name [ அப்பா அல்லது அம்மா பெயர் ]
> Mobile No [அலைபேசி எண்]
> Email Id [மின்னஞ்சல்]
> Password [பாஸ்வேர்ட்]
> Confirm Password [பாஸ்வேர்ட்]
> Enter above Captcha [மேலுள்ள எண்ணை பதிவிடவும்]
> I agree [பட்டனை டிக் செய்யவும் ]
> Submit

முக்கிய குறிப்புகள் :

உங்களுடைய பெயரை பதிவிடும் போது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் உள்ளவாறு இருக்க வேண்டும் அல்லது வங்கி லோனுக்காக கொடுக்கும் ஆவணத்தில் உள்ளவாறு இருக்க வேண்டும்.

உங்களிடம் மொபைல் எண் இல்லாதபட்சத்தில் உங்கள் பெற்றோரின் மொபைல் எண்ணை கொடுக்கலாம்.

ஒருமுறை கொடுத்துவிட்டால் மின்னஞ்சல் முகவரியை மாற்றிட முடியாது. அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் வாயிலாகவே வரும் என்பதால் சரியாக கொடுக்கவும்.

வித்யா லட்சுமி இணையத்தில் உள்ள அம்சங்கள் :

இதுவரை 39 க்கும் மேற்பட்ட வங்கிகள் 70 க்கும் மேற்பட்ட லோன் ஸ்கீம் களை Vidya Lakshmi Portal இல் இணைந்துள்ளன.

அனைத்து வங்கிகளுக்குமான பொதுவான லோன் அப்ளிகேஷன்

வங்கிகள் மாணவர்களின் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யும் வசதி

வங்கிகள் processing status ஐ அப்லோட் செய்வதற்கான வசதி

மாணவர்கள் தங்களுக்குள்ள சந்தேகங்களை மின்னஞ்சல் மூலமாக வங்கிகளிடம் கேட்டு அறிந்துகொள்ளும் வசதி

அரசு உதவி தொகை பெறுகின்ற திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன

How to apply loan?

https://scholarships.gov.in/

அரசு தரும் வாய்ப்பினை பயன்படுத்தி நீங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து படியுங்கள், வாழ்வினில் வெல்லுங்கள்.

PAMARAN KARUTHU

Share with your friends !
Exit mobile version