Site icon பாமரன் கருத்து

Vehicle e-Pass க்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to apply for Vehicle e-Pass?

 

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் யாராவது இறந்தாலோ அல்லது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றாலோ அல்லது மருத்துவ காரணங்களுக்காக வெளியே செல்லவேண்டிய தேவை இருந்தாலோ நீங்கள் Vehicle e-Pass க்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு நீங்கள் சில சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து வைத்திருக்க வேண்டும்.

>> ஆதார் அட்டை அல்லது லைசென்ஸ்  

>> காரணத்திற்கான சான்றிதழ்கள்

[ஸ்கேன் செய்வதற்கு “CamScanner” ஆப்பை பயன்படுத்தலாம்.]

 

இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள் : Click Here




ஒருவர் மருத்துவ காரணத்திற்காக வெளியே செல்ல எப்படி இதனை பூர்த்தி செய்திட வேண்டும் என இங்கே விளக்குகிறேன். நீங்கள் உங்களது காரணத்திற்கு ஏற்றாற்போல மாற்றி பூர்த்தி செய்திடுங்கள். தயவு செய்து உண்மையான காரணங்களுக்காக இந்த சேவையை பயன்படுத்துங்கள்.

Full Name of the Applicant : நோயால் பாதிக்கப்பட்டவரின் பெயர்

Mobile Number : அவருடைய மொபைல் எண்

Date of Birth : அவருடைய பிறந்த தினம்

E-Mail : உங்களுடைய மின்னஞ்சல் முகவரி

Type of Applicant : இதில் Government மற்றும் Private என இரண்டு ஆப்சன்கள் இருக்கும். அதில் “Private” என்பதை தெரிவு செய்திடுங்கள்

Address of the Applicant பகுதியில் உங்களது முகவரி, மாவட்டம், தாலுகா, காவல் நிலையம் அமைத்துள்ள ஊர் பெயர்,போஸ்ட் ஆபீஸ் அமைந்துள்ள ஊர் பெயர், பின் கோடு ஆகியவற்றை பதிவிடுங்கள்

 

Pass Details பகுதியில் நீங்கள் பயணிக்கப்போகும் வாகனம் குறித்த அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டி இருக்கும்.

Vehicle Registration No * : வாகனத்தின் பதிவு எண்

Vehicle Type * : இரண்டு சக்கர வாகனமா அல்லது நான்கு சக்கர வாகனமா

Journey Type * : one way [ஒரு வழி பயணமா] round trip [இருவழி பயணமா]

Purpose of Travel * : பயணத்திற்கான கரணம் [மருத்துவம்]

Pass From Date * : எந்த தேதியில் இருந்து

Pass To Date * : எந்த தேதி வரை

From (Source of Route) * : உங்கள் ஊர் பெயர் மற்றும் மாவட்டத்தின் பெயர் குறிப்பிடுங்கள்

To (Destination of Route) * செல்ல வேண்டிய ஊர் மற்றும் மாவட்டத்தின் பெயர்

Remarks (Reason justifying travel) * : இந்தப்பகுதி தான் மிகவும் முக்கியமான பகுதி. நீங்கள் செல்ல வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதனை அதிகாரிக்கு புரிய வைக்கும் அளவிற்கு நீங்கள் விளக்கமாக உங்களது காரணத்தை தெரிவியுங்கள். தற்போதைக்கு இந்தப்பகுதி ஆங்கிலத்தில் எழுத வேண்டி இருக்கிறது. இதனை தமிழக அரசு சரி செய்யும் என நம்புவோம்.



Members Travelling : பயணம் செய்ய இருப்பவர் குறித்த தகவல்களை இந்த பகுதியில் கொடுத்திடுங்கள். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் (+) பட்டனை அழுத்தி அந்த தகவல்களை பதிவிடுங்கள்

I Agree * : அனைத்து தகவல்களையும் கொடுத்த பின்பு இந்த கட்டத்தை செலக்ட் செய்திடுங்கள் Word verification ஐ பூர்த்தி செய்து “submit” பட்டனை அழுத்திடுங்கள்.

Attachment Section : முதலில் இருக்கும் ஆப்சனில் நீங்கள் உண்மையான நபர் தான் என்பதற்கான ஸ்கேன் செய்யப்பட்ட டாக்குமெண்டை இணைக்க வேண்டும். அது ஓட்டுநர் உரிமமாக இருக்கலாம், ஆதார் அட்டையாக இருக்கலாம்.

support attachment : நீங்கள் எதற்காக பயணம் செய்ய வேண்டுமோ அதற்கான காரணத்திற்கு உதவிகரமாக இருக்கும் சான்றிதழ்களை இங்கே இணைக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் மாத்திரை வாங்க செல்ல வேண்டும் எனில் நீங்கள் இதற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான சான்றிதழ், கடந்த மாதங்களில் மாத்திரை வாங்கியதற்கான பில் போன்றவற்றை கொடுக்கலாம்.

நீங்கள் அனைத்து தகவல்களையும் கொடுத்த பிறகு அனுப்பலாம். அனுப்பிய பிறகு உங்களது மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதேபோல மின்னஞ்சல் முகவரிக்கும் ஒரு ரிசிப்ட் அனுப்பப்படும்.

 

அதிகாரிகள் உங்களுடைய தகவல்களை சரிபார்த்த பிறகு உங்களுடைய அப்ளிகேஷன் ஏற்றுக்கொள்ளப்பட்டால் “Approved” என்ற செய்தியோடு Vehicle e-Pass சான்றிதழும் அனுப்பப்படும். இதனை நீங்கள் உங்களது மொபைலில் டவுன்லோட் செய்துகொண்டு பயணம் செய்யலாம். நீங்கள் பயணம் செய்திடும் போது உங்களுடைய ஒரிஜினல் அடையாள அட்டையை வைத்துக்கொள்ளுங்கள்.

* இதனை சரியான காரணத்திற்காக பயன்படுத்துங்கள்.

 

Get updates via WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version