Site icon பாமரன் கருத்து

How Secure is your password? | உங்க பாஸ்வேர்டு பாதுகாப்பானதா?

 நிஜ உலகில் வீடுகளுக்கு பூட்டும் சாவியும் எவ்வளவு முக்கியமோ அதனைபோலவே இணையத்தில் நாம் பயன்படுத்துகின்ற மின்னஞ்சல் (Email) , வேலை செய்யும் இணையத்தளம் (Work Place), மொபைல் ஆப் (Mobile App) , பேங்கிங் ஆப் (Banking App) போன்ற அனைத்திற்குமே பாதுகாப்பு கட்டமைப்பும் கடவுச்சொல் அதாவது password இன் உறுதித்தன்மையும் மிக முக்கியம் .

 

 

என்னதான் நிறுவனங்கள் ஹேக்கர்களை ஊடுருவ முடியாத அளவிற்கு வலிமையான பாதுகாப்பு கட்டமைப்புகளை (Security Structure)  வைத்திருந்தாலும் கூட பயன்படுத்துபவர்கள் எளிமையான கடவுச்சொல்லை பயன்படுத்திடும் போது ஹேக்கர்கள் எளிமையாக தகவல்களை திருடி விடுகின்றனர் .

கடவுச்சொல் – Password

அண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இன்னும்கூட பலர் 123456, password, password@123, iloveyou,name@123 என எளிமையான password களை வருவதாக சொல்லப்படுகிறது. இதில் வருந்தத்தக்க விசயம் என்னவென்றால் இப்படி எளிமையான password களை பயன்படுத்திடும் பலர் இணையதளம் குறித்து நன்கு அறிந்தவர்கள்  , ஹேக்கிங் பற்றியும் அறிந்தவர்கள்   ஆனாலும் அலட்சியமாக எளிமையான  கடவுச்சொல்லை பயன்படுத்துகின்றனர் .

 

வலிமையான password ஐ உருவாக்குவது எப்படி ?

 

How to create Strong Password?

 

Password Managers /Generators

இணையத்தில் தற்போது இலவசமாகவே பல password manager கள் கிடைக்கின்றன , உதாரணத்திற்கு

 

Strong Random Password Generator
https://passwordsgenerator.net
Password Generator | LastPass
https://www.lastpass.com
RANDOM.ORG – Password Generator
https://www.random.org

இவற்றில் சென்று கடினமான password களை உருவாக்கிக்கொள்ளலாம் .

 

Avoid Same Passwords for all

 

அனைத்திற்கும் ஒரே password வைப்பது தவறு
சில இணையதளங்கள் (Providers) தங்களது வாடிக்கையாளர்களின் தகவல்களை விற்க முற்படும்போது அல்லது ஹேக்கர்கள் அந்த இணையதளத்தில் தகவல்களை திருடிடும் போதோ உங்களது அனைத்து அக்கவுண்டுகளையும் ஹேக்கர்களால் ஹேக் செய்துவிட முடியும் .

 

Don’t Save your Passwords on Browser

 

அடுத்தமுறை login செய்யும்போது எளிமையாக இருக்கவேண்டும் என்பதற்காக பிரவுசரில் remember password கொடுத்து வைத்திருப்பார்கள் . பலர் password  களை மறந்து போவதற்கு முக்கிய காரணமே remember password தான் .

 

அனைத்து ப்ரவுசர்களையும் நம்பி remember password கொடுப்பது நல்லதல்ல . சில சமயங்களில் உங்களுக்கு தெரியாமலே வேறு ஒருவரால் அதனை தெரிந்துகொள்ள முடியும் .

 

Prefer long password

 

நாம் password பயன்படுத்துவதன் முக்கிய நோக்கமே வேறு யாரும் நமது தகவல்களை திருடிவிட கூடாது என்பதற்காகத்தான் . அப்படி இருக்கும்போது நினைவில் வைத்துக்கொள்வது கடினமாக இருக்கின்றது , அடிக்கடி பதிவிடுவது கடினமாக இருக்கின்றது என்பது போன்றவற்றிற்காக எளிமையான சிறிய password ஐ பயன்படுத்துவது மிக தவறு .

 

12 முதல் 15 டிஜிட் வரையிலான password பயன்படுத்தும்போது ஹேக்கர்களால் அதனை கண்டறிவது கடினம் என சொல்லப்படுகிறது .

 

————————————

 

 

இணைய உலகில் பாதுகாப்பாக செயல்படுவோம்.

More post here ….

Pamaran Karuthu

 

Share with your friends !
Exit mobile version