Site icon பாமரன் கருத்து

How 50 million Facebook accounts admits Security breach?

சில நாட்களுக்கு முன்பாக facebook நிறுவனம் ஓர் அறிவிப்பினை தானாகவே வெளியிட்டது . அதன்படி கிட்டத்தட்ட 50 மில்லியன் facebook கணக்குகள் வரை பாதுகாப்பு அச்சுறுத்துதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என தெரிவித்தது . ஏற்கனவே கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா பிரச்சனையில் சிக்கி தவித்த facebook க்கிற்கு அடுத்த தலைவலியாக இந்த Security Breach வந்திருக்கின்றது . கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா பிரச்சனையில் அமெரிக்க செனட் சபையில் ஆஜரான மார்க் அவர்களிடம் கேட்கபட்ட கேள்விகளில் ஒன்று “தகவல் கசிந்ததை அந்த கணக்காளர்களுக்கு ஏன் சொல்லவில்லை ? ” என்பதுதான் .



தற்போது facebook இப்படியொரு பாதுகாப்பு மீறல்  நடந்திருக்கிறது என வெளிபடையாக அறிவிக்க இதுவே மிக முக்கியகாரணமாக இருக்கலாம் . ஆனால் வரவேற்கப்படவேண்டிய விசயம் .

 


 

How Facebook accounts admits Security Breach?

 

Facebook இதற்கான காரணத்தை கூறியுள்ளது , அதன்படி facebook இல் இருக்கக்கூடிய ‘View As’ ஆப்சனை பயன்படுத்தியே Security Breach நடைபெற்று இருக்கின்றது . நாம் நம்முடைய கணிணியில் facebook ஐ login செய்து வைத்திருக்கின்றோம் என வைத்துக்கொள்வோம் . அடுத்தமுறை நாம் facebook இல் செல்லும்போது password கொடுக்காமலேயே உள்ளே நுழையும் . அப்போது ஒரு token ஒன்று தானாக உருவாகும் . view as ஆப்சனில் உருவாகும் இந்த token ஹேக்கர்களால் ஹேக் செய்யும்படியாக இருந்தது . இதனால் தான் 50 மில்லியன் facebook கணக்குகள் பாதுகாப்பான சூழலில் இல்லையென உடனடியாக அறிவித்தது facebook .

 

 

தற்போது பாதிக்கப்பட்டிருந்த facebook account அனைத்திற்கும் புதிய token மாற்றப்பட்டிருப்பதாகவும் ஆகையால் அந்த account ஐ பயன்படுத்துபவர்கள் மீண்டும் ஒருமுறை password ஐ கொடுத்து login செய்யவேண்டி இருக்கும் என தெரிவித்து இருக்கின்றது . மேலும் உள்ளே சென்றவுடன் இந்த security breach தொடர்பான அறிவிப்பினை நோடிபிகேஷன் மூலமாக அறிவிக்கவும்  செய்திருக்கின்றது facebook .

மிகப்பெரிய அளவில் தகவல்களை வைத்திருக்கக்கூடிய facebook அவ்வப்போது பிரச்சனையில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது . ஹேக்கர்களும் தொடர்ச்சியாக சவால் விடுத்து வருகின்றனர் . வெறுமனே facebook பயன்படுத்துவதோடு நில்லாமல் facebook உள்ளே என்ன பிரச்சனை நடக்கிறது என்பதனை தெரிந்து வைத்திருப்பது டிஜிட்டல் உலகில் நல்ல விசயம் .

மேலும் பல அறிவியல் கட்டுரைகளை படிக்க கிளிக் செய்திடுங்கள்


 

பாமரன் கருத்து

 

Share with your friends !
Exit mobile version