Site icon பாமரன் கருத்து

வாழ்வில் வெற்றிபெற உங்களிடமே கேட்க வேண்டிய கேள்விகள் ?

வாழ்க்கையின் வேகத்தில் தாங்கள் யார் ? தங்களுக்கு என்ன வேண்டும் ? எதற்காக படிக்கிறோம்? என்னவாக போகிறோம் ? கிடைத்த வேலை பிடித்துள்ளதா ? எதற்காக இந்த வாழ்க்கை என எதைப்பற்றியும் சிந்திக்காமல் வேகமாக ஓடும் பேருந்தில் எந்த ஊருக்கு போகிறது என பார்க்காமல் ஏறும் பயணியைப்போலவே நாம் வாழ்க்கையில் பயணிக்கிறோம் .

நண்பர்களே வாழ்வதற்கு பணம் முக்கியம் , பணம் வேண்டுமானால் வேலை முக்கியம் , வேலைக்கு படிப்பு முக்கியம் . ஆனால் அதோடு சேர்த்து நம் மனதுக்கு வேறு ஏதோ ஒன்றில் மிகுந்த நாட்டமிருக்கலாம் . எதையோ செய்ய அது ஏங்கி கொண்டிருக்கலாம் .அதை நாம் அடையும்போது வாழ்வின் உயரிய சந்தோசத்தை நாம் பெறுவோம் .

நமக்கு அப்படி என்ன பிடித்திருக்கிறது ? நம் மனம் எதனை செய்ய விரும்புகின்றது என முதலில் சிந்திக்க வேண்டும் . அதற்கு உங்களை பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் .

உங்களை பற்றி அறிய தியானம் செய்ய வேண்டியது இல்லை , ஞானிகளிடமோ பூசாரிகளிடமோ செல்ல வேண்டியது இல்லை . நீங்கள் செய்ய வேண்டியது உங்களிடமே கேள்விகளை கேட்பதுதான் . உங்கள் மனதை விட உங்களை பற்றி அறிந்தவர் உலகில் எவரும் இலர் .

சரி என்ன கேள்விகளை கேட்கலாம் என்கிறீர்களா ? இதோ சில கேள்விகள் உங்களுக்காக …இதனை கேட்டு நிதானமாக சிந்தித்து பதில் கூறுங்கள் . உங்களுக்கு பிடித்தது எதுவென்பது தெரியும் .

> நீங்கள் எதை செய்யும்போது உங்கள் மனம் சந்தோஷமடைகிறது ?

> நீங்கள் பிற வேலைகளில் மும்முரமாக இருந்தாலும் களைத்து போயிருந்தாலும்
எதை செய்ய விரும்புவீர்கள் ?

> இதை நான் நன்றாக செய்கிறேனே என நீங்களே உங்களை பாராட்டிக்கொண்ட செயல் என்ன ?

> உங்களால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என நம்புகிறீர்களா ?

> எந்த தவறான பழக்கத்தை விட்டுவிட உங்களுக்கு ஆசை ? அதனை செய்ய முயற்சித்தது உண்டா ?

> உங்கள் சக்தி என்ன ?

> உங்கள் மனதிற்கு நீங்கள் சொல்ல வேண்டிய அறிவுரை என்ன ?

> உங்கள் விருப்பத்துக்காக எதையும் சந்திக்க தயாரா ?

இந்த கேள்விகளுக்கு விடை கொடுத்துவிட்டபிறகு அதனை நீங்களே நிதானமாக படித்து பாருங்கள் .

நீங்கள் சாதிக்க செய்ய வேண்டியது உங்கள் மனதிற்கு விருப்பமான அதனை தான் . அதனை நீங்கள் செய்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம் .

உங்கள் மனதோடு பேசுங்கள் .

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version