Site icon பாமரன் கருத்து

How Baba Ramdev’s Kimbho Chat App looks? | கிம்போ சாட் ஆப் அறிமுகம்

ஆயுர்வேத விற்பனை நிறுவனமாக அறியப்பட்ட பதஞ்சலி (Patanjali) நிறுவனம் தற்போது சிம்கார்டு ( sim card) மற்றும் சாட் (Chat application) செய்யும் செயலி (Chat application) என தகவல் தொழில்நுட்ப துறையில் இறங்கியுள்ளது   .

 

 

யோகா குரு என அறியப்பட்ட பாபா ராம்தேவ் (Baba Ramdev’s) அவர்கள் திடீரென விற்பனையாளராக பதஞ்சலி (Patanjali) என்னும் மருத்துவ மட்டும் வீட்டு உபயோக பொருள்களை விற்கும் நிறுவனத்தை துவக்கினார் . ஆயுர்வேத பொருள்கள் (Aturvedha) மற்றும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது என்பதனால் பொதுமக்களிடையேயும் அதிக வரவேற்பை பெற்றது .

 

தற்போது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தற்போது இருக்கக்கூடிய துறையிலிருந்து முற்றிலும் மாறான துறையான தொழில்நுட்பதுறையில் நுழைந்திருக்கிறது . இது மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தாலும் இது தொடரும் என தெரிகின்றது .

 

Swadeshi Samriddhi சிம்கார்டு :

பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் நாட்டின் அரசு தொலைதொடர்பு நிறுவனமான BSNL உடன் இணைந்து சிம்கார்டு (swadeshi SIM) ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளார் . தற்போது இந்த சிம்கார்டு பதஞ்சலி நிறுவனத்தில் வேலைபார்ப்பவர்களுக்கும் ரீடைலர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது . 

 

மக்களின் பயன்பாட்டிற்கு இந்த சிம்கார்டு வரும்போது சிம்கார்டு வைத்திருப்பவர்களுக்கு 10 சதவிகித தள்ளுபடி பதஞ்சலி பொருள்களுக்கு வழங்கப்பட இருக்கின்றதாம் .

 

swadeshi messaging platform “Kimbho” :

 

 சிம்கார்டுக்கு அடுத்தபடியாக தற்போது சாட் ஆப்பான  கிம்போவை அதிரடியாக களமிறக்கியுள்ளது . ஏற்கனவே இணைய உலகில் 1 பில்லியன் டவுன்லோட்களை பெற்றுள்ள வாட்ஸ்ஆப் க்கு (WhatsApp) போட்டியாக பதஞ்சலி நிறுவனம் களமிறக்கியுள்ளது .

 

இதில் வாட்ஸ்ஆப்பில் செய்யக்கூடியவையான தனிநபர்களுக்கு மெசேஜ் அனுப்புதல் (Direct Message) , குரூப் மெசேஜ் அனுப்புதல் (Group Message) போன்றவை இருக்கும் . அதோடு சேர்த்து broadcast list , பிரபலங்களை பின்தொடருதல் (Following Celebrities), டூடுள் (Doodle) போன்றவற்றையும் மேற்கொள்ளலாம் .

 

 

அதோடு சேர்த்து text audio, photos, videos, stickers, quickies, location, GIF, Doodle and more,” the description reads.

facebook நிறுவனம் தன்னுடய வாட்ஸ்ஆப்பில் (What’sApp) பணம் அனுப்பும் வசதியை (Payment) முழுமையாக அறிமுகப்படுத்த இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் பதஞ்சலியின் கிம்போ சாட் ஆப் (Kimbho Chat App) வருவது குறிப்பிடத்தக்கது .

 

வாட்ஸ்ஆப்பில் தகவல்கள் end to end encryption  செய்து அனுப்பப்படுவதைப்போலவே பதஞ்சலியின் கிம்போ ஆப்பிலும் இருக்கின்றது .

 

ஏற்கனவே வாட்ஸ்ஆப் , Hike என பல சாட் ஆப்கள் இருக்கும் நிலையில் பதஞ்சலியின் கிம்போ சாட் ஆப் எப்படி வாடிக்கையாளர்களை கவரப்போகிறது என தெரியவில்லை .

 

ஆனால் கிம்போ சாட் ஆப் இந்திய நிறுவனத்தால் தொடங்கப்பட்டிருக்கும் சாட் ஆப் என்பது தான் அதற்கு இருக்கும் அடையாளம். ஆனால் வாடிக்கையாளர்களை கவருவதற்கு அது மட்டுமே போதுமா என்பதனை பொருத்திருந்து பார்ப்போம் .

 

PAMARAN KARUTHU

Share with your friends !
Exit mobile version