Every June 21 is a international yoga day
உடற்பயற்சி கூடம் உடலை ஆரோக்கியமானதாக மாற்றிடும் , யோகா மனதோடு வாழ்வையே ஆரோக்கியமானதாக மாற்றிடும்
இது யோகாவினால் மனதளவிலும் வாழ்விலும் பல நல்ல முன்னேற்றங்களை அடைந்தவர்கள் கூறுகின்ற கூற்று . இன்று வாழ்க்கை முறை முற்றிலுமாக மாறிவிட்டது . உடலை பக்குவப்படுத்த உடற்பயிற்சிக்கூடம் செல்கிற பலர் , மனதினை பலப்படுத்த தவறி விடுகின்றனர் .
உண்மையில் யோகா உடல்வலிமையையும் மன வலிமையையும் தருவதாக கூறுகிறார்கள்.
இந்தியா டுடே நாளிதல் யோகாவினால் வாழ்க்கை முறை எவ்வாறு மாறியிருக்கிறது என யோகா வகுப்பிற்கு செல்லும் ஒருவரிடம் கேட்டப்போது “யோகா வகுப்பிற்கு செல்வதற்கு முன்பாக நள்ளிரவில் திடீரென விழித்துக்கொள்ளுவேன் . பிறகு எனது மூளை எதனையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கும் , நான் தூங்க வேண்டும் என நினைத்தாலும் முடிவது இல்லை . மிகபெரிய கொடுமையாக இருந்தது .
பிறகுதான் யோகாவிற்கு சென்றால் நிச்சயமாக இதற்கு தீர்வு கிடைக்கும் என நண்பர்கள் அறிவுறுத்தியதால் சென்றேன் . உண்மைதான் எனக்கு இப்போது மாற்றம் தெரிகின்றது . இரவு நேரங்களில் விழிப்பதும் மூளை எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பதும் இப்போது இல்லை ” என்றார் .
தீய பழக்கங்களில் இருந்து விடுபட தேவையான உடல்பலம் மனபலம் இரண்டையுமே யோகா தருகின்றது .
International Day of Yoga June 21
ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தபடி ஜுன் 21 உலக யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது .
தற்போதய நமது பிரதமர் திரு மோடி அவர்களின் முயற்சியால் உலக அளவில் நமது பாரம்பரிய யோகாவிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது .
இன்றும் பலர் யோகாவை இந்து மத குறியீட்டோடு பார்ப்பதனால் பலருக்கு இன்னும் யோகாவின் பலன் சென்று சேரவில்லை என கூறுகிறார்கள் . நாளடைவில் இது மாற்றம் அடையும் எனவும் அனைத்து மக்களும் யோகாவின் பலன்களை பெற வேண்டும் எனவும் கூறுகிறார் யோகா பயிற்றுநர்கள் .
உண்மையில் யோகா ஒரு கலை , மதச்சார்பு அற்றது.
காலம் இன்று வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது , ஒவ்வொருவரும் அளவுக்கு அதிகமாக சிந்தித்தும் உழைத்தும் வருகின்றோம் . இளமை பருவத்தில் எதனையும் தாங்கிடும் சக்தி இருப்பதனால் சில குறைபாடுகள் நாம் அறியாமலே நமக்குள் இருக்கின்றன .
வயதாக வயதாக உடல் சக்தி மன சக்தி இவற்றை இழக்கும்போது நாம் அதுவரை சேர்த்து வைத்திருந்த குறைபாடுகள் அனைத்தும் சேர்ந்துகொண்டு நம்மை வருத்தும் .
ஆகவே நண்பர்களே தொடர்ந்து உடற்பயற்சி செய்திடுங்கள் , உங்களது மனம் வலுப்பெற யோகாவுடன் இணைந்திருங்கள் .
யோகா ஒரு மதம் சார்ந்த கலை அல்ல , அது மனிதம் சார்ந்த கலை . பயன்படுத்திக்கொள்ளுங்கள் .
பாமரன் கருத்து