Site icon பாமரன் கருத்து

மகளுக்கு சல்யூட் அடித்த அப்பா? அங்கே நடந்தது என்ன?

காவல்துறையில் உயர் அதிகாரிகள் வரும்போது அவர்களுக்கு சல்யூட் அடிப்பது வழக்கம். திருப்பதியில் அப்படி ஒரு ஆண் இன்ஸ்பெக்டர் ஒரு பெண் DSP அதிகாரிக்கு சல்யூட் அடித்ததை பார்த்து அந்த இடமே ஆனந்தக்கடலில் மூழ்கியது.

காவல்துறையில் உயர் அதிகாரிகள் வரும்போது அவர்களுக்கு சல்யூட் அடிப்பது வழக்கம். திருப்பதியில் அப்படி ஒரு ஆண் இன்ஸ்பெக்டர் ஒரு பெண் DSP அதிகாரிக்கு சல்யூட் அடித்ததை பார்த்து அந்த இடமே ஆனந்தக்கடலில் மூழ்கியது.

 

நீட் தேர்வில் மகளுக்கு போலியான சான்றிதழ் கொடுத்து அவரது எதிர்காலத்தையே சிதைத்த மருத்துவர் ஒருவரின் செயலை கடுமையாக அண்மையில் கண்டித்திருந்தோம். தற்போது ஒரு சம்பவம் திருப்பதியில் நடந்திருக்கிறது. அந்த நிகழ்வு அப்பாக்கள் மகள்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக அமையும். சியாம் சுந்தர் ஆந்திர காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் யென்ட்லூரு ஜெஸ்ஸி பிரசாந்தி [Yendluru Jessy Prasanthi] தற்போது டிஎஸ்பி ஆக அதே ஆந்திர காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.

இவர்கள் இருவரும் ஒரே மாநிலத்தில் பணியாற்றினாலும் கூட வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றியதால் வேலை நேரத்தில் இருவரும் சந்தித்துக்கொள்வது கிடையாது. Ignite எனும் புரோகிராம் ஜனவரி 4 முதல் 7 வரை திருப்பதியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வந்தபோது தான் ஒருவரை ஒருவர் பணி நேரத்தில் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மகளைக் கண்டவுடன் வழக்கமாக உயர் அதிகாரிகளுக்கு சல்யூட் அடிப்பதைப்போல சல்யூட் அடிக்க முற்பட்டார் ஷியாம். ஆனால் தனக்கு அப்பா சல்யூட் அடிப்பதை விரும்பாத ஜெஸ்ஸி எனக்கு நீங்கள் சல்யூட் அடிக்க வேண்டாம் அப்பா என கேட்டுக்கொண்டார்.

தன்னை விட உயர் பதவியில் மகள் இருப்பதைக் கண்டு மகிழ்வுற்ற ஷியாம் ஜெஸ்ஸி சொல்லையும் மீறி சல்யூட் அடித்தார். பிறகு ஜெஸ்ஸியும் திரும்ப சல்யூட் அடித்தார். இந்த நிகழ்வு அப்பா மகள் இருவருக்கும் இடையே மட்டும் மகிழ்ச்சியை கொடுக்கவில்லை, கூடியிருந்த அனைவரும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கினர்.

தனது அப்பா தான் தனக்கு முன்மாதிரி என குறிப்பிட்ட ஜெஸ்ஸி அவர் நேர்மையாக பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என நினைவு கூர்ந்தார். ஆந்திர காவல்துறை இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு வாழ்த்தியுள்ளது.

அப்பாக்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக நடந்துகொண்டால் அவர்கள் வெல்வார்கள். 

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Exit mobile version