Site icon பாமரன் கருத்து

லாக்டவுன் : சரியானவர்களுக்கு உதவி சென்று சேர வேண்டும்

இந்தியாவில் வேலை இழப்பவர்கள் எண்ணிக்கை

ஒரு அரசு ஊழியரோ அல்லது வீட்டிலிருந்தே பணி புரியும் தனியார் ஊழியருக்கு வருமானம் என்பது இந்த ஊரடங்கில் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. ஆனால் ஒரு முடிவெட்டும் கடை வைத்திருப்பவர், பழக்கடை வைத்திருக்கும் பாட்டி போன்றவர்கள் இந்த ஊரடங்கினால் பாதிக்கப்படுவார்கள். வருமானம் இழப்பார்கள். அவர்களுக்கு உதவி கிடைப்பது தானே அவசியம். 

 

லாக்டவுன் மீண்டும் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சிறிய தொழில்புரிவோர் மற்றும் தினசரி வேலைக்கு செல்வோர் அடையாளம் காணப்பட்டு உதவிகள் அவர்களுக்கு சரியாக சென்று சேருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் கொடுப்பதைவிடவும் சரியானவர்களுக்கு கொடுப்பது பயனுள்ளது.

கடந்த ஊரடங்கில் முடங்கிப்போனவர்களில் சிலரே மீண்டு வந்திருக்கக்கூடிய சூழ்நிலையில் மீண்டும் ஊரடங்கு என்பது சாமானியர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ளது. ஆனால் கொரோனா மூன்றாவது அலை அச்சம் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் இந்த அபாய சூழ்நிலையில் ஊரடங்கு என்பது தவிர்க்க முடியாத விசயமாக இருக்கிறது. இந்த ஊரடங்கினால் பாதிக்கப்பட போவது சிறிய சிறிய தொழில் செய்வோர் தான். முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் சொன்னபடி 4000 ரூபாய் உதவித்தொகை மக்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது. ஆனால் இதில் சிறிய ஆலோசனை ஒன்றினை அரசுக்கு சொல்லவேண்டிய கடமை இருப்பதாக உணர்கிறேன்.

இங்கே ஒவ்வொரு திட்டமும் செயல்படுத்தப்படும் போது ”அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும்” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இங்கே அரசு ஊழியர்களுக்கும் நன்றாக பணம் சம்பாதிக்கும் குடும்பத்திற்கும் கூட ரேஷன் அட்டை என்பது இருக்கிறது. உதவித்தொகை என்பது அனைவருக்கும் தான் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதில் தான் மாற்றம் வர வேண்டும்.

 

 

யார் தொழில் செய்கிறார்கள் என்ற தகவல்கள் அரசால் சேகரிக்கப்பட வேண்டும். எந்தெந்த குடும்பங்கள் எவ்வளவு வருமானத்தை பெறுகின்றன என்ற தகவல் சேமிக்கப்பட வேண்டும். அப்படி தரவுகள் சேகரிக்கப்பட்டால் யார் இதுபோன்ற ஊரடங்கு காலத்தில் வருமானத்தை இழக்கிறார்களோ அவர்களுக்கு அரசின் அதிகபட்ச உதவி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு, ஒரு அரசு ஊழியரோ அல்லது வீட்டிலிருந்தே பணி புரியும் தனியார் ஊழியருக்கு வருமானம் என்பது இந்த ஊரடங்கில் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. ஆனால் ஒரு முடிவெட்டும் கடை வைத்திருப்பவர், பழக்கடை வைத்திருக்கும் பாட்டி போன்றவர்கள் இந்த ஊரடங்கினால் பாதிக்கப்படுவார்கள். வருமானம் இழப்பார்கள். அவர்களுக்கு உதவி கிடைப்பது தானே அவசியம்.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது, இந்த காலகட்டத்தில் முறையாக அவற்றை பயன்படுத்தினால் சரியானவர்களுக்கு உதவி சென்று சேர வழிவகை செய்திட முடியும். 






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version