Site icon பாமரன் கருத்து

Google’s 20th Birthday | கூகுளின் 20 வது பிறந்தநாள்

 


 

Google 20th Birthday Doodle
நாம் ஒவ்வொருவரும் சக மனிதர்களிடம் கேள்வி கேட்கிறோமோ இல்லையோ கூகுளிடம் ஏதேனும் ஒரு கேள்வியாவது கேட்டுவிடுகிறோம். இந்த இடம் எங்கிருக்கிறது? அந்த மனிதர் யார்? உலகம் ஏன் உருண்டையாக இருக்கிறது? முடி கொட்டுவதை தடுப்பது எப்படி? இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் என்ன? என பல கேள்விகளை Google Search இல் தேடி வருகிறோம். இன்று (September 27, 2018) கூகுள் சர்ச் இன் 20 வது பிறந்தநாள். இதனை கொண்டாடுவதற்காக சிறப்பான டூடுள் ஒன்றினை கூகுள் வெளியிட்டுள்ளது.


இந்த டூடுளில் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அதிகப்படியான Search களை நினைவுபடுத்தும் விதமாக டூடுளில் அவற்றினை இடம்பெற செய்துள்ளது. உதாரணத்திற்கு “What will happen on Y2K?”, “How do you tie a tie?” and “What’s the most popular sport in the world?” “.

மேலும் டூடுளின் youtube வீடியோவின் Description இல் பின்வருமாறு செய்தியை பகிர்ந்துள்ளது. wenty (ish) years ago, two Stanford Ph.D. students launched a new search engine with a bold mission to organize the world’s information and make it universally accessible and useful. Though much has changed in the intervening years—including now offering Search in more than 150 languages and over 190 countries—Google is still dedicated to building products for everyone. இதன் பொருள் கடந்த இருப்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பினை படித்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் புதிய தேடுபொறியை வடிவைத்தனர். அதன் மூலமாக உலகில் கிடைக்கும் தகவல்களை திரட்டி, அந்த தகவல்களை தேடுபவர்களுக்கு கொடுக்கும் விதமாக தேடுபொறியினை வடிவமைத்தனர். தற்போது பல மாறுதலை அடைந்திருக்கிறது. மேலும் இப்போது 150 மொழிகளில், 190 க்கும் மேலான நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது.
வரும்காலங்களில் கூகுள் இன்னும் சிறப்பான தொழில்நுட்ப சேவையினை மக்களுக்கு வழங்கும் என்பதில் சந்தேகமில்லை, வாழ்த்துக்கள் கூகுள்.

 

பாமரன் கருத்து

பாமரன் கருத்து
Exit mobile version