இடஒதுக்கீடு என்பது விவாதத்திற்கு உரியதாகவும் குழப்பத்திற்கு உரியதாகவும் இருந்து வருகிறது. இடஒதுக்கீட்டில் பங்குபெறுகிறவர்கள் பொதுப்பிரிவில் உள்ளவர்களைக்காட்டிலும் அதிக மதிப்பெண்ணை பெற்றாலும் அவர்களை அனுமதிக்காத சூழலில் “பொதுப்பிரிவு என்பது ‘இடஒதுக்கீடு’ அல்ல எனவும் அது தகுதி படைத்த எவருக்கும் அது பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் கான்ஸ்டபிள்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என குற்றசாட்டு எழுந்தது. ஓபிசி பிரிவைச் சேர்ந்த, குறிப்பாக அதிக பெண்கள் இணைந்து முன்வைத்த குற்றச்சாட்டின்படி – போதிய தகுதி பெற்றிருந்தாலும் கூட அவர்களை ஓபிசி பிரிவில் இருந்து பொதுப்பிரிவுக்கு மாற்றி அவர்களுக்கு வேலை வழங்கிடவில்லை என தெரிவித்து இருந்தார்கள். உதாரணத்திற்கு, ஓபிசி பிரிவில் இருக்கும் ஒருவர் 200 மதிப்பெண் பெற்றிருக்கிறார் எனில் அவருக்கு கிடைக்காத வேலை பொதுப்பிரிவில் இடம் பிடித்த 150 மதிப்பெண் வாங்கிய ஒருவருக்கு கிடைத்துள்ளது என்பது போன்றது.
இதில் தான் உச்சநீதிமன்ற நீதிபதி UU லலித் அவர்கள் தலைமையிலான அமர்வு பின்வரும் விளக்கங்களை அளித்துள்ளது. இந்த விளக்கம் நாடு முழுமைக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கு பொருந்தும் என்பதனால் அனைவரும் இதனை அறிந்திருப்பது அவசியமாகிறது.
குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மக்களுக்கு இடஒதுக்கீட்டு பலனை அளிப்பது என்பது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு போதிய பிரதிநித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்காகத்தான். அதேசமயம், பொதுப்பிரிவு என்பது தகுதி படைத்த அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது தான். ஒருவர் குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டு பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் கூட குறிப்பிட்ட கல்வி அல்லது வேலைவாய்ப்பிற்கான தகுதியை பெற்றிருக்கிறார் எனில் அவரை பொதுப்பிரிவுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என தெளிவுபடுத்தி இருக்கிறது.
இதனால் ஓபிசி பிரிவில் 200 மதிப்பெண் பெற்றவர் பொதுப்பிரிவுக்கு நகர்த்தப்பட்டு அவரது மதிப்பெண்ணின் அடிப்படையில் அவருக்கு வேலை அல்லது கல்வி வாய்ப்பு வழங்கப்படும்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!