Site icon பாமரன் கருத்து

How Gender pay gap there India | பெண் பணியாளர்களுக்கு குறைவான சம்பளம் ஏன் ? சட்டம் என்ன சொல்கிறது ?

இந்தியாவில் பெண்களுக்கு 20% குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது

அண்மையில் எடுக்கப்பட்டுள்ள ‘Monster Salary Index’ (MSI) தரவுகளின் படி இந்தியாவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஊதிய பாகுபாட்டில் கிட்டத்தட்ட 20% வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. சராசரியாக ஒரு ஆண் இந்தியாவில் வேலை பார்ப்பதற்கு Rs 231 சம்பளமாக பெறுகிறார் எனில் அதே ஒரு மணி நேரத்திற்கு Rs 184.8 மட்டுமே பெறுகிறார்.

 

ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஊதியம் வழங்கிடவேண்டும் என என்னதான் சட்டம் போட்டாலும் இன்னும் ஊதிய பாகுபாடு 20% அளவிற்கு இருந்துகொண்டு தான் இருக்கிறது. இந்த வேறுபாடு 2016 இல் 24.8 சதவிகிதமாக இருந்துள்ளது. தற்போது 2018 இல் இதன் வேறுபாடு 20% ஆக குறைந்துள்ளது.

எடுக்கப்பட்ட ரிப்போர்ட் இன் படி 0-2 ஆண்டு அனுபவம் கொண்ட பணியாட்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஊதிய பாகுபாடு 7.8% ஆகவும் 6-10 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பணியாட்களில் இந்த வேறுபாடு 15.3% ஆகவும் 11 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் கொண்டவர்களில் இந்த சதவிகிதம் 25 ஐ தாண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள வேறுபாடு அதிகரிப்பதற்கு காரணமாக சொல்லப்படுவது பெண்களின் வேலைத்திறன் ஆண்களுடன் ஒப்பிடும்போது குறைவு என்பதே. மேலும் பெண்களை இரவு பணியில் பயன்படுத்துவது கடினம், கல்யாணம், குழந்தை பேறு விடுமுறை என பல காரணங்கள் கம்பெனிகளால் வைக்கப்படுகிறது.

பெண்களும் இதனை ஒப்புக்கொண்டுள்ளனர், நாங்களும் ஆண்களுக்கு இணையாக வேலை செய்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் சம்பளம் பெண் என்பதாலேயே குறைத்து வழங்கப்படுகிறது, இதனை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

ஆனால் இதற்கென சட்டங்கள் ஏற்கனவே இருக்கின்றன அவை முறையாக கடைபிடிக்கப்பட்டாலே இந்த பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.

சட்டம் என்ன சொல்கிறது ?

வேலை பார்க்குமிடத்தில்  பாகுபாடு ” நிறம் , சாதி , மதம் , அலுவல் சார்ந்த பாகுபாடு , கருத்து வேறுபாடு , பாலினம் போன்ற காரணங்களால் பாகுபாடு காட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனை தடுக்க பல்வேறு வகையான சட்டங்களை இந்திய அரசு கொண்டுவந்துகொண்டுதான் இருக்கின்றது . ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வு பெண்களிடத்தில் இல்லாமல் போனதால் அந்த சட்டங்கள் நீர்த்துப்போய் உள்ளன .

Equal Remuneration Act, 1976 1987

இந்த சட்டம் ஒரே மாதிரியான வேலை செய்பவர்களுக்கு ஆண் பெண் என பாகுபாடு காட்டாமல் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்கிறது .

மேலும் இந்த சட்டம் வேலைக்கு ஆள் எடுத்தல் ,சம்பளம் , பதவி உயர்வு , பயிற்சியில் பாலின பாகுபாடு கூடாது என்கிறது . இருந்தாலும் திறமையின் அடிப்படையிலும் அவர்கள் பார்க்கும் வேலை சார்ந்தும்  ஒரு அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்களிடையே சம்பள வேறுபாடு இருக்கலாம் . ஆனால் ஒரே வேலை பார்த்தால் ஒரே சம்பளம்.

இந்த பகுதியை வைத்துக்கொண்டு ஆண்களுக்கு அதிக முக்கியதுவம் வாய்ந்த பணியும் பெண்களுக்கு முக்கியத்துவம் குறைந்த பணியும் ஒதுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுகின்றது  .
ஒவ்வொரு பெண்களும் தங்களுக்கு சட்டம் வழங்கியுள்ள உரிமை பற்றி அறிந்து வைத்திருத்தல் அவசியம் .
PAMARAN KARUTHU

Share with your friends !
Exit mobile version