ஆப்பிள் தன்னுடைய புதிய இயங்குதளம் , புதிய தொழில்நுட்பங்கள் , மொபைல் போன்றவற்றினை தொழில்நுட்ப வல்லுநர்களின் முன்நிலையில் அறிமுகப்படுத்துவது வழக்கமான ஒன்று அந்தவகையில் இந்த ஆண்டிற்கான ஆப்பிள் நிகழ்வு Gather Round என்னும் தலைப்பில் செப்டம்பர் 12 , 2018 அன்று நடைபெற இருக்கின்றது . உலகின் பல பகுதிகளில் இருக்கக்கூடிய ஆப்பிள் வாடிக்கையாளர்களின் அபிமான நிகழ்வான இது இந்திய நேரப்படி 10:30 PM மணி அளவில் கலிபோர்னியாவில் இருக்கக்கூடிய ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கத்தில் தொடங்க இருக்கின்றது .
எத்தனையோ நிறுவனங்கள் புதிது புதிதாக மொபைல் போன்களை வெளியிட்டு வந்தாலும் அன்றுமுதல் இன்றுவரை ஏதோ ஒருவித கவர்ச்சியினை மக்களிடத்தில் பெற்று இருப்பது ஆப்பிள் நிறுவன தொழில்நுட்ப சாதனங்கள் தான் . ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன் , ஐ பேட் அல்லது வாட்ச் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றினை வைத்திருப்பதே பெருமையான விசயமென கருதுகிற அளவிற்கு ஆப்பிள் மக்களிடத்தில் சேர்ந்திருக்கிறது அல்லது சேர்க்கப்பட்டிருக்கிறது .
இந்த ஆண்டு எதற்கு முக்கியதுவம் இருக்கும் ?
இந்த ஆண்டிற்க்கான அழைப்பிதழில் தங்க நிற வளையம் பொறிக்கப்பட்ட அழைப்பிதழ்கள் செய்தியாளர்களுக்கும் , தொழில்நுட்பவல்லுனர்களுக்கும் விருந்தினர்களுக்கும் அனுப்பப்பட்டன .
இரண்டாவது ஆண்டாக நடக்கும் இந்த நிகழ்வில் கடந்த ஆண்டைப்போலவே முக்கியத்துவம் ஐபோன் மொபைல் மற்றும் ஐபோன் வாட்ச் ஆகியவற்றிற்கு கொடுக்கப்படுமென தெரிகின்றது . கடந்த ஆண்டு iPhone 8 and iPhone 8 Plus, iPhone X, and Apple Watch series 3 அறிமுகப்படுத்தப்பட்டது .
காத்திருங்கள் !