Site icon பாமரன் கருத்து

அமைச்சர்களை அடிச்சு விரட்டிட்டு ???

 


கஜா புயல் பாதிக்கபட்ட பகுதிகளில் நிவாரண பொருள்களை கொண்டு செல்வோரையும் சில அமைச்சர்களையும் பொதுமக்கள் தடுத்து நிறுத்துவதும் சில இடங்களில் அடிதடி வரைக்கும் கூட சென்றிருக்கிறது . உதாரணத்திற்கு அமைச்சர் ஓஎஸ் மணியன் சென்ற கார் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றது . பின்தொடர்ந்து  வந்து சண்டைபோடும் காட்சிகளும் வெளிவந்தன.

 



இதுபோன்ற நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் பல தலைப்புகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது .

 

கொலைவெறியோடு ரவுண்டு கட்டிய மக்கள்
தப்பிக்க சுவர் ஏறி குதித்தும் மாட்டிக்கொண்ட அமைச்சர்

 

இன்னும் சிலரோ இது தமிழகம் முழுவதும் தொடரவேண்டும் எனவும் பகிர்கிறார்கள் .

 

இப்படி செய்வதற்கு காரணம் என்னவென்று கேட்டால் நிவாரணம் உடனடியாக செய்யவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது .

 

அமைச்சரை விரட்டியபிறகு அங்க நிவாரண பணி நடந்துருச்சா ? இழப்பீடு வந்துருச்சா ?

 

அவர்கள் சரியாக செய்யவில்லையென்றே வைத்துக்கொள்வோம் , அதற்காக அவர்களை சிறைபிடிப்பது , காரை உடைப்பது , தகாத வார்தைகளால் பேசுவது மட்டும் சரியானதாகி விடுமா ? சமூகவலைத்தளங்களில் இதனை இன்னும் தூண்டுவதை போன்று மீம்ஸ்கள் செய்திகள் போடுவது சரியானதாகி விடுமா ?

 

சரி இப்படி வருகிறவர்களை அடித்து ஓடவிட்டால் நிவாரணம் உடனடியாக நடந்துவிடுமா ? மின்சாரம் தான் வந்துவிடுமா?

 

தற்போது நிகழ்ந்திருப்பது மிகப்பெரிய பேரழிவு. பிடித்திருக்கிறதோ பிடிக்கவில்லையோ, இதற்கு உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டியது இந்த அரசுதான் , அரசால் மட்டுமே அவ்வளவு பெரிய தொகையினை கொடுக்க இயலும் . இதனை மறந்துவிடாதீர்கள் .

 




ஆட்சியாளர்கள் சரியாக செயல்படாவிடில் கேள்வி கேட்பது , போராட்டங்கள் நடத்துவது நமக்கான உரிமை .அதேசமயம் தாக்குதல் நடத்துவது , தாக்குதல் நடத்துவதை ஊக்குவிப்பது மிகப்பெரிய தவறு . அது நம் மீதான வெறுப்பையே  கொடுக்கும்.

 


 

உண்மையாலுமே புரட்சி செய்யணும் , அநீதியை எதிர்க்கும் அப்படினா தேர்தல் நடக்கும்போது லஞ்சம் வாங்காமா ஓட்டு போடுங்க , அங்க ஹீரோவா நடந்துக்கோங்க . சமூக வலைதளவாசிகள் அத வரவேற்று மீம்ஸ் போடுங்க.




அரசாங்கத்தின் கைக்கூலி என என்னையும் தூற்றலாம் தூற்றிக்கொள்ளுங்கள் ,கவலையில்லை. நீங்கள் தவறான பாதையில் செல்லும்போது அதனை ஆதரிக்காமல்    எதிர்த்தால் நான் குற்றவாளி என்றால் குற்றவாளியாக இருப்பேன் , மகிழ்ச்சியாக .

 


பாமரன் கருத்து

 

Share with your friends !
Exit mobile version